கங்குவா வசூலை 6 வருடங்களுக்கு முன்பே காலி செய்த எஸ்.கே!.. இது செம மேட்டரு!..
Kanguva : சினிமாவில் எந்த நடிகர் எப்போது மேலே வருவார். எந்த நடிகர் அதிக சம்பளம் வாங்குவார் என கணிக்கவே முடியாது. வெற்றி பெறும் குதிரை மீது மட்டுமே பந்தயம் கட்டுவது போல வெற்றியை கொடுக்கும் நடிகர்கள் பின்னால் மட்டுமே தயாரிப்பாளர்கள் போவார்கள். சினிமா என்பது கலை என்றாலும் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு சினிமா என்பது வியாபாரம்தான்.
இந்த நடிகரை வைத்து இவ்வளவு பட்ஜெட்டில் படமெடுத்தால் நமக்கு எவ்வளவு லாபம் வரும் என்பதுதான் தயாரிப்பாளரின் கணக்கு. அதேநேரம் அந்த கணக்கு எல்லா நேரத்திலும் நினைத்தபடியே நடக்கும் என சொல்ல முடியாது. தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.
இவரி சூர்யாவின் நெருங்கிய உறவினர் இவர். பருத்திவீரன் படம் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கினார். சிறுத்தை சிவாவை இயக்கத்தில் சூர்யா நடிக்க அதிக பட்ஜெட்டில் அவர் உருவாக்கிய திரைப்படம்தான் கங்குவா. இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷனும் செய்தார்கள்.
கண்டிப்பாக இப்படம் 2 ஆயிரம் கோடி அடிக்கும். விரைவில் சக்சஸ் மீட் என்றெல்லாம் பேசினார். ஒருபக்கம், ‘கண்டிப்பாக இந்த படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள்’ என சூர்யா பேசினார். ஆனால், படம் ரசிகர்களை கவரவில்லை. அதோடு, சூர்யாவை பிடிக்காத ஒரு குரூப் இப்படத்தை மோசமாக விமர்சித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இதனால், படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என ஞானவேல் ராஜா சொன்ன நிலையில் கங்குவா 200 கோடியை கூட வசூலிக்கவில்லை. இது சூர்யாவை அப்செட் ஆக்கினாலும் அதை மறந்துவிட்டு இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் கங்குவா படம் செய்த மொத்த வசூலை சிவகார்த்திகேயன் 6 வருடங்களுக்கு முன்பே தாண்டியது தெரியவந்திருக்கிறது. கங்குவா படம் தமிழகத்தில் 39.10 கோடியை வசூல் செய்திருக்கிறது. 2018ம் வருடம் வெளியான சீமராஜா படம் 47.60 கோடியை வசூல் செய்திருக்கிறது. அதேபோல், கங்குவா படம் வெளியாவதற்கு முன்பே வெளியான அமரன் படம் கங்குவா படம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டும் கூட பல தியேட்டர்களிலும் ஓடி நல்ல வசூலை பெற்று 300 கோடியை அள்ளியது குறிப்பிடத்தக்கது.