சொல்லல சொல்லலன்னு எல்லாத்தையும் சொல்லிட்டீங்க!.. அதர்வாவை ஓவராக புகழ்ந்த எஸ்.கே!..

by Ramya |
sk adharva
X

sk adharva

இயக்குனர் விஷ்ணுவரதன்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன். இவர் . நடிகர் இயக்கிய பில்லா, ஆரம்பம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இயக்குனர் விஷ்ணுவரதன் அங்கு ஷெர்ஷா என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார்.

ஆகாஷ் முரளி: இயக்குனர் விஷ்ணுவரதன் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி மற்றும் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஆகியோரை வைத்து நேசிப்பாயா என்கின்ற காதல் கதையை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்த திரைப்படத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் ஆகியோருடன் நடிகர் பிரபு, குஷ்பூ, சரத்குமார், கல்கி கோச்லின் ஆகிய ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பரான காதல் கதையை உருவாக்கி இருக்கின்றார் என்று விஷ்ணுவர்தனை பாராட்டி வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார்.

இசை வெளியீட்டு விழா: இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து கதையின் நாயகன் ஆகாஷ் முரளியின் அண்ணனான நடிகர் அதர்வாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சிவகார்த்திகேயன் அனைவரையும் பற்றி மிக நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

அதிலும் யுவன் சங்கர் ராஜாவை மிகவும் பாராட்டி புகழ்ந்து பேசி பேசியிருந்தார். அப்போது அதர்வா குறித்து பேச தொடங்கிய சிவகார்த்திகேயன் 'அதர்வா உங்களைப் பற்றி நான் எதுவும் பேசப் போவதில்லை. நான் உங்கள் பற்றி நம்முடைய பட விழாவில் பேசிக் கொள்கிறேன். நிறைய இருக்கிறது உங்களைப் பற்றி பேசுவதற்கு.. இன்னும் அவருடன் சேர்ந்து நடிக்க தொடங்கவில்லை.

தற்போது படத்தின் பூஜை விழாவில் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எஸ்.கே 25 படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய கதாபாத்திரம் எந்த அளவுக்கு எனக்கு பிடித்திருந்ததோ? அதே அளவுக்கு அதர்வாவின் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


நிச்சயம் படம் வெளியானதற்கு பிறகு அதர்வாவின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அவரைப் பிடித்தவர்கள் அனைவருமே அதர்வாவை எண்ணி மிகவும் பெருமைப்படுவார்கள் என்று பேசியிருந்தார், இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் அதர்வா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு உருவாகி வரும் எஸ்கே25 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story