Amaran: துப்பாக்கியை கொடுத்தது தப்பே இல்ல!.. விஜயை தாண்டிய எஸ்.கே!.. அமரன் ராக்ஸ்!..
Amaran: சினிமாவில் போட்டி என்பது எப்போதும் இருக்கும். சில நடிகர்கள் எப்போதும் உச்ச நடிகர்களாக இருப்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் அந்த இடங்களை ரஜினி, கமல் இருவரும் பிடித்தார்கள். அவர்களுக்கு பின் இளைய நடிகராக விஜய், அஜித் போன்றோர் வந்தனர். ஆனாலும் ரஜினியே எப்போதும் உட்ச நடிகராக இருக்கிறார்.
72 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கிறார். வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என ஒரு கும்பல் கிளம்பியது. இதனால் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் எழுந்தது.
இப்போதுவரை டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருவரின் ரசிகர்களும் சண்டை போட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் கோட் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு செல்வது போல ஒரு காட்சி இடம் பெற்றது.
விஜய் ஏற்கனவே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அந்த துப்பாக்கி காட்சி ஒரு குறியீடாகவே பார்க்கப்பட்டது. அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என பலரும் பேசினார்கள். இந்நிலையில்தான், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அமரன் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. 3 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தொட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 150 கோடி வசூலை இப்படம் தாண்டியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதுவரை எந்த சிவகார்த்திகேயன் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது இல்லை. வெளிநாட்டிலும் அமரன் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் புக் பெய்ய ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தும் BookMyShow இணையதளத்தில் அமரன் படத்திற்கு இதுவரை 205 ஆயிரம் (2 லட்சம்) டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருக்கிறது. விஜயின் கோட் படத்திற்கே 190 ஆயிரம் (ஒரு லட்சத்து 90 ஆயிரம்) டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டது.
அதேபோல், மகாராஜா படத்திற்கு 126 ஆயிரம் டிக்கெட்டுகளும், அயலான் படத்திற்கு 125 ஆயிரம் டிக்கெட்டுகளும், கேப்டன் மில்லர் படத்திற்கு 88 ஆயிரம் டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டது. இதை பார்க்கும்போது சிவகார்த்திகேயன் டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். விஜய் அவரிடம் துப்பாக்கியை கொடுத்தது சரிதான் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.