அவங்கக்கிட்ட நீங்க நிரூபிக்க தேவையில்லை.... இளைஞர்களுக்கு SK.சொன்ன 'நச்' தகவல்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:07  )

தமிழ்சினிமாவில் உச்சநட்சத்திரங்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டாக்டர், டான் படங்கள் சக்கை போடு போட்டன. தொடர்ந்து இப்போது தீபாவளிக்கு ரிலீஸான அமரன் படமும் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது.

இளைஞர்கள், சிறுவர்கள், தாய்மார்கள், முதியோர்கள் என அனைவரையும் தனது அபாரமான நடிப்பாற்றலால் கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பும், தளபதி விஜயின் நடிப்பும் அனைத்துத் தரப்பினரையும் கவரும்.

அதுக்கு முக்கியமான காரணம் என்னன்னா இவர்கள் குழந்தைகளையும் கவரும் வகையில் நடிப்பை வெளிப்படுத்துவார்கள். அந்த மேனரிசங்கள் அதில் வெளிப்படும். டான்ஸ், காமெடின்னு பல இடங்களில் இந்த டச் இருக்கும்.

இப்போது சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். 'யாரு என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க. உங்களுக்குப் புடிச்சத, புடிச்சவங்களுக்குப் பண்ணிட்டுப் போயிட்டே இருங்க. ஏன்னா நம்மள புடிச்சவங்களுக்கு நம்மளை நிரூபிக்க தேவை இல்லை. நம்மளைப் பிடிக்காதவங்களுக்கு என்ன பண்ணினாலும் பிரயோஜனம் இல்ல' என்கிறார் சிம்பிளாக எஸ்.கே.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் வாழ்ந்துள்ளார். இது உண்மைக்கதை என்பதால் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. கமல் தயாரிப்பு என்பதாலும் படம் ராணுவம் பற்றிய கதை என்பதாலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள். படத்தின் கலெக்ஷன் உலகம் முழுவதும் 150 கோடியைத் தாண்டியுள்ளது வரவேற்கத்தக்கது.

டிவியில் ஆங்கராக இருந்து மிமிக்ரி கலைஞராக வந்து ஆங்கராக இருந்து அசத்தியவர் சிவகார்த்திகேயன். படிப்படியாகத் தனது வளர்ச்சியை தளராத உழைப்பைக் கொண்டு வளர்த்து வந்தவர். சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கலந்த கேரக்டரில் நடித்தார்.

ஹீரோவின் நண்பனாக வந்தார். அப்படி 3 படத்தில் தனுஷூக்கு நண்பனாக வந்து அனைவரையும் கவர்ந்தார். அதன்பிறகு அவரது படங்களையே ஓர்டேக் செய்யும் அளவிற்கு முன்னேறி விட்டார் என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

Next Story