வெங்கட்பிரபுவுக்கு பெரிய ஷாக் கொடுத்த எஸ்கே!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் என்கின்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு காரணம் அமரன் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றது. அதற்கு முன்பு வரை சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக மாறி இருக்கின்றார்.
கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உண்மை கதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தின் மூலமாக அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் எஸ்கே 25 திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிவிட்டது.
இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நாளை இப்படத்தின் டீசர் வெளியாகும் என்கின்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தின் சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.
இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமரன் திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி வந்தார். இதனால் வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை சந்தித்து வெளிப்படையாக பேசியிருக்கின்றார். சமீபத்தில் 10 நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல பார் ஒன்றுக்கு வெங்கட் பிரபுவை அழைத்த சிவகார்த்திகேயன் அங்கு வைத்து வெளிப்படையாக பேசியிருக்கின்றார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் தற்போது உங்களது திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை.
அடுத்து இரண்டு வருடத்திற்கு எனக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதால் 2 வருடத்திற்கு பிறகு நிச்சயம் உங்கள் திரைப்படத்தில் நடிக்கின்றேன் என்று கூறியிருக்கின்றார். இந்த செய்தியை கேட்டு வெங்கட் பிரபு மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.