SK: எனக்கு கலெக்ஷன் தான் ரொம்ப முக்கியம்... அதுக்கு காரணம் இதுதான்..? சக்சஸ் மீட்டில் பகிர்ந்த SK..!

by ramya |
SK: எனக்கு கலெக்ஷன் தான் ரொம்ப முக்கியம்... அதுக்கு காரணம் இதுதான்..? சக்சஸ் மீட்டில் பகிர்ந்த SK..!
X

siva

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடுத்த இடத்திற்கு சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன்.

நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியானது முதலே திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது.

இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக கலெக்ஷனை அள்ளும் படமாக மாறி இருக்கின்றது. பெரிய பெரிய நடிகர்களான விஜய் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்களை தொடர்ந்து அதிக வசூல் ஈட்டும் படமாக அமரன் திரைப்படம் மாறி இருக்கின்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் அவரது கெரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.


அது மட்டும் இல்லாமல் 3 நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதல் 200 கோடி படமாக அமரன் திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக சாய்பல்லவி மிக சிறப்பாக நடித்திருக்கின்றார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். அதில் சிவகார்த்திகேயன் 'படத்தின் வசூல் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் படத்தின் ப்ரொடியூசர் இந்த படத்தை நம்பி மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தால் மட்டுமே அடுத்தடுத்து இதுபோன்ற படங்களை தயாரிப்பதற்கு முன் வருவார்கள். மேலும் எனக்கும் படத்தின் வசூல் மிக முக்கியம். அதற்கு காரணம் அப்போதுதான் நான் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து மிகச்சிறந்த படங்களை மக்களுக்கு கொடுக்க முடியும் என்பது தான்.

எவ்வளவு நாடுகளில் எவ்வளவு ஊர்களில் நம்முடைய படத்தை கொண்டு சேர்க்க முடியுமோ அப்படியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான். அப்படியான படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் வசூல் முக்கியம் என்று கூறுகிறேன். எனக்கு இந்த படத்தின் வசூலை முறியடித்து விட்டேன் அந்த படத்தின் வசூலை முறியடித்து விட்டேன் என்பதற்காக இல்லை.

எனக்கு நிறைய பட்ஜெட் வேண்டும். ஏனென்றால் இன்னும் பெரிய கதைகளை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன். இதற்கு முன்னாடி நான் செய்த அத்தனை கமர்சியல் என்டர்டைன்மெண்ட் படங்களின் இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். அவர்களால்தான் நான் இப்போது இங்கு நிற்கின்றேன்' என்று பேசி இருந்தார்.

Next Story