அத நான் செய்யணும்னா பக்கா காரணம் இருக்கணும்!.. சும்மா முடியாது.. எஸ்கே அதிரடி!..
நடிகர் சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். இவரின் வளர்ச்சி சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருகின்றார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார்கள். படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இருவரின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தது.
இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. விரைவில் இப்படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாட இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்பொழுது படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. அடுத்ததாக டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படம் தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் எஸ் கே25 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு 1965 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, அதர்வா, நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த திரைப்படமும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் கெரியரில் மற்றொரு முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்திருந்தார்.
அந்த வகையில் பேட்டியை தொகுத்து வழங்கியவர் உங்கள் படங்களில் நீங்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதில்லை. நீங்கள் தான் அது போன்ற காட்சிகளில் நடிக்க மறுக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் என்னால் என் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க முடியும் . ஆனால் அந்த கதாபாத்திரம் என்னை நம்ப வைக்க வேண்டும்.
அதற்கு ஒரு நியாயம் இருக்க வேண்டும் நான் சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு நான் உன்னை கொன்று விடுவேன் என்று சொன்னால் அது நிச்சயம் ஒரு வில்லன் கதாபாத்திரமாக இல்லாவிட்டால் அதனை நான் செய்ய மாட்டேன். ஒரு வேலை வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டிய சூழல் உருவானால், அப்படி ஒரு சிகரெட் பிடிக்கும் காட்சி இயக்குனருக்கு தேவை என்கின்ற பட்சத்தில் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.