என்னை டார்கெட் பண்றாங்க!. பல பேருக்கு என்ன புடிக்கல!. மீண்டும் புலம்பும் சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan: திருச்சியை சொந்த ஊராக கொண்ட சிவகார்த்திகேயனுக்கு சினிமாவோடு எந்த தொடர்பும் இல்லை. அப்பாவை போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என ஆசைப்பட அவரின் அம்மா அதை அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த வேலையில் இருந்த அவரின் அப்பா திடீரென இறந்துபோனார்.
மிமிக்ரி வேலை: கல்லூரி படிப்புக்கு பின் இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து வந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஆங்கரிங் செய்ய துவங்கினார். ஒரு நிகழ்ச்சிக்கு 4500 சம்பளம் கொடுத்தார்கள். அப்போதே திருமணமும் செய்து கொண்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்ட அதற்காக முயற்சிகள் செய்தார்.
ரஜினி முருகன்: சில படங்களில் சின்ன சின்ன வேஷங்கள் கிடைத்தது. அதன்பின் எதிர் நீச்சல், ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதோடு, சில வருடங்களிலேயே தனது சீனியர்களை ஓரம் கட்டி சம்பளத்திலும் முன்னேறினார்.
மேடையில் அழுகை: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலரின் கண்ணையும் உறுத்தியது. இதை சிவகார்த்திகேயனிடம் அஜித்தே ஒரு முறை கூறியிருக்கிறார். சொந்தமாக படம் தயாரித்து கடனில் சிக்கியபோது அவரை பலரும் டார்ச்சர் செய்தார்கள். ‘என்னை வேலை செய்ய விடுங்க’ என ஒரு அப்போதே மேடையிலேயே அழுதுகொண்டே சிவகார்த்திகேயன் பேசினார்.
டார்கெட் பண்றாங்க: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் ‘ சினிமா துறையில் என்னை போன்ற சாதாரண சிலர் வருவது பலருக்கும் பிடிக்கவில்லை. சிலருக்கு அதில் மகிழ்ச்சி இல்லை. ‘அவன் யார் இங்கு வருவதற்கு?’ என கேட்கிறார்கள். இன்னும் சிலர் என்னிடமே ‘இந்த துறையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என கேட்டார்கள். அவர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே கடந்துவிடுகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
மேலும், சோஷியல் மீடியாவில் ஒரு குரூப் இருக்கிறது. என் படம் தோற்று போனால் என்னை மட்டுமே காரணமாக காட்டுகிறார்கள். என் படம் வெற்றி பெற்றால் என்னை தவிர மற்றவர்களை பாராட்டுகிறார்கள். தோல்வியில் பொறுப்பேற்கும் எனக்கு வெற்றியிலும் பங்கு பெற உரிமை உண்டு’ என பேசியிருக்கிறார்.