1. Home
  2. Cinema News

நானும் பேன் இண்டியா நடிகராகணும்!.. பெரிய இயக்குனர்களுக்கு வலை விரிக்கும் எஸ்.கே!..

shah rukh khan

விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்து அதன்பின் சினிமாவில் நுழைந்து உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். இவரை பார்த்து விஜய் டிவியிலிருந்து பலரும் சினிமாவில் நடிக்க வந்தார்கள். ஆனால் யாரும் சிவகார்த்திகேயன் அளவுக்கு இன்னும் உயரவில்லை. சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியதுதான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இதைப்பார்த்து அவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களும். பல இளம் நடிகர்களும் பொறாமைப்பட்டார்கள். ஒரு சில படங்களில் சறுக்கினாலும் அதிக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது. அதேநேரம் அடுத்த வெளிவந்த மதராஸி படம் அதில் பாதியை கூட வசூல் செய்யவில்லை.

sivakarthikeyan

தற்போது சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் 2026 ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகியுள்ளது. அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம் பிரபாஸ், அல்லு அர்ஜூன், தனுஷ் போல நாமும் பெரிய பேன் இண்டியா நடிகராக மாற வேண்டும் என்கிற ஆசை சிவகார்த்திகேயனுக்கு வந்திருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரின் பல வருட ஆசையாக இருந்தது. ஆனால் 2 தோல்விப்படங்களை கொடுத்துள்ள ஷங்கர் பக்கம் இப்போது அவர் செல்லமாட்டார்.

ராஜமவுலிக்கு தூது விடலாம் என்றால் இன்னும் 5 வருடங்களுக்கு அவர் பிஸி. எனவேதான் பாலிவுட் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலிக்கு வலைவிரித்திருக்கிறார். மும்பையில் உள்ள சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்தின் கீழ் சிவகார்த்திகேயன் நின்று கொண்டிருந்த வீடியோ சமீபத்தில் வெளியானது. அது தற்போது நடந்த சம்பவம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த சந்திப்பு நான்கைந்து மாதங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது. பாலிவுட்டில் Devdas, Black,Ram Leela, Bajirao Matani, Padmaavat போன்ற சிறந்த படங்களை இயக்கி தேசிய அளவில் கவனம் பெற்றவர் சஞ்சய் லீலா பன்சாலி.

bhansali

சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவரை சந்திக்க அனுமதி கேட்டு அதன்பின் அங்கு நேரில் சென்று அவரிடம் ‘உங்கள் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என வாய்ப்பு கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘ஒரு கதையை உருவாக்கிவிட்டு உங்களை அழைக்கிறேன்’ என சொல்லி அனுப்பிவிட்டாராம் பன்சாலி. அவரின் இயக்கத்தில் நடித்தால் இந்திய அளவில் நாம் கவனம் பெறுவோம் என நினைக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!..

 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.