வெங்கட்பிரபுவை விரட்டும் எஸ்.கே!.. சீன் போட்டதெல்லாம் வீணாப்போச்சே!..

Sivakarthikeyan: சினிமாவில் ஒரு நடிகர் எடுக்கும் முடிவு என்பது நிலையாக இருக்காது. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு இயக்குனரிடம் கதை கேட்டு ஒரு நடிகர் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பார். ஆனால், அந்த இயக்குனர் இயக்கிய படம் ஒன்று வெளியாகி தோல்வி அடைந்துவிட்டால் அந்த இயக்குனரை அந்த நடிகர் கழட்டிவிட்டுவிடுவார். இது சினிமாவில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான்.
இதில், பல இயக்குனர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில இயக்குனர்கள் இதை கடந்து மேலே வந்திருக்கிறார்கள். பல இயக்குனர்கள் இதனாலேயே காணாமல் போயிருக்கிறார்கள். சினிமாவை பொறுத்தவரை எல்லாம் சரியாக அமைய வேண்டும். இல்லையென்றால் இழுத்துக்கொண்டே இருக்கும்.
சிவகார்த்திகேயனும், வெங்கட்பிரபுவும் அதை இப்போது சந்தித்து வருகிறார்கள். கோட் படத்தின் வேலை நடக்கும்போது சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னார் வெங்கட்பிரபு. சிவகார்த்திகேயனும் அதில் நடிக்க சம்மதித்தார். சிவகார்த்திகேயனின் 25வது படமாக இப்படம் உருவாகவிருந்தது. சிவகார்த்திகேயனை ஐஸ் வைப்பதற்காக கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவரை நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. அதுவும் விஜய் அவரின் துப்பாக்கியை அவரிடம் கொடுப்பது போலவெல்லாம் காட்சியை வைத்தார்.

ஆனால், கோட் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, வெங்கட்பிரபுவை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார் சிவகார்த்திகேயன். ‘அப்புறம் பாக்கலாம் புரோ’ என அவரை கழட்டிவிட்டுவிட்டு பராசக்தி படத்தில் நடிக்கப்போனார். எனவே, சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க பல பேர் மூலமாக தூதுவிட்டார் வெங்கட்பிரபு. ஒருவழியாக நடிக்க சம்மதித்தார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடித்து வந்த பராசக்தி படம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் மீண்டும் துவங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 5 நாட்களில் அந்த படம் முடிவடையவுள்ளது. பராசக்தி படத்தை 2026 பொங்கலுக்கு வெளியிடலாம் என திட்டம் போட்டியிருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அது நடக்குமா என தெரியவில்லை. ஏனெனில், அந்த படத்தின் தயாரிப்பாளர் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கியிருக்கிறார்.
எனவே, மதராஸி படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் கையில் படம் எதுவுமில்லை. எனவே, வெங்கட்பிரபுவை அழைத்து ‘சீக்கிரம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க புரோ’ என சிவகார்த்திகேயன் கேட்டிருக்கிறாராம். அந்த படத்தையாவது விஜயின் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பொங்கலில் வெளியிட சிவகார்த்திகேயன் கணக்கு போடுவதாக தெரிகிறது.