சின்ன தளபதி... கூட்டத்திலிருந்து வந்த ரசிகையின் குரல்... சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் ராணுவ வீரராக அவர் நடித்து அசதி இருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. நம் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் sony பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றது. இப்படத்தில் மேஜர் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார். மேலும் அவரின் மனைவி இந்து ரெபாகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கின்றார்.
இன்று காலை வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை எந்த படத்திலும் இல்லாத சிவகார்த்திகேயனை இப்படத்தில் தாங்கள் பார்த்ததாகவும், அவருக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். மேலும் சாய் பல்லவி மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷின் இசை படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்று விட்டது என்று தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
சினிமாவில் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் என்று தொடர்ந்து சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஒரு ராணுவ அதிகாரியாக முறையாக பயிற்சி எடுத்து தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார். நடிகர் விஜய்க்கு துப்பாக்கி படம் எப்படி அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருந்ததோ அதேபோல் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய படமாக இருக்கும்.
இதற்கு அடுத்ததாக அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி விடுவார் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அப்போது அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒரு ரசிகை சின்ன தளபதி என்று அழைக்க உடனே சிவகார்த்திகேயன் கையை அசைத்து வேண்டாம் என்று கூறி அந்த சிறுமியை சைலன்ட் ஆக்கினார்.
பின்னர் குழந்தைகளுடன் வந்து அமரன் படத்தை பார்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அவர் கோரிக்கை வைத்திருந்தார். சின்ன தளபதி என்று ரசிகை கத்தியதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.