எஸ்கே 25 படத்தின் டைட்டில் இதுவா!.. அப்ப புறநானூறு இல்லையா?.. எதுக்கு இந்த மாற்றம்?..
தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கின்றார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகிறது. அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் ஏறத்தாழ முடிவடைய இருக்கின்றது. இதனை தொடர்ந்து டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே25 படத்தின் அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதாவது சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். ஜெயம் ரவி, நடிகர் அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாலும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றது. பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகின்றது.
முதலில் இயக்குனர் சுதா கொங்காரா இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவை வைத்து எடுப்பதற்கு முயற்சி செய்தார். படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி போஸ்டரும் வெளியானது. இந்த படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கால்ஷீட் பிரச்சினை காரணமாக சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தான் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் வந்தார்.
தற்போது காஸ்டிங் அனைத்தும் மாற்றப்பட்டு ஜெயம் ரவி, அதர்வா என புது காம்போவில் இப்படம் தயாராகி வருகின்றது. படத்தின் டைட்டில் புறநானூறு தான் என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்திற்கு தற்போது டைட்டிலை மாற்றி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் 1965 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து உருவாகும் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அந்த ஆண்டின் பெயரை வைக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
அதாவது படத்திற்கு 1965 என டைட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. படக்குழு அதிகாரப்பூர்வமாக விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சூர்யாவிற்காக எழுதப்பட்ட அதே கதையில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இருப்பினும் கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்ற போதிலும் படத்தின் டைட்டிலை மட்டும் மாற்றி இருக்கின்றார் இயக்குனர் சுதா கொங்காரா.
சிவகார்த்திகேயன் கெரியரில் இந்த திரைப்படமும் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமரன் திரைப்படத்தின் மூலமாக ஒரு முக்கிய அடையாளத்தை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயன் புறநானூறு திரைப்படத்தின் மூலமாக மேலும் சிவகார்த்திகேயனுக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.