அடம் பிடிச்ச இயக்குனர்... மகனுக்காக முதல் முறையாக சத்யராஜிடம் சிபாரிசுக்கு சென்ற சிவக்குமார்...
Sivakumar: கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் தயங்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சனையில் முதல்முறையாக சிவகுமாரை இறங்கி பேசிய சம்பவமும் நடந்திருக்கிறது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்த இப்படத்தில் கார்த்திக், சாயிஷா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து இருந்தார்.
முதலில் இத்திரைப்படத்தில் நடித்த சத்யராஜ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாகுபலி படத்தில் நடித்திருந்த சத்யராஜ் என்னுடைய நடிப்பிற்கு இப்படம் தீனி போடாதே என தயங்கி இருக்கிறார். வேறு வழியில்லாத இயக்குனர் பாண்டிராஜ் ராஜ்கிரணை அணுகி அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்.
அவராலும் கால்ஷீட் பிரச்சினையால் படத்தில் நடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து தான் எதிர்பார்க்கும் பிரபலங்கள் படத்தில் இணையாமல் போக கோபமான பாண்டிராஜ் இப்படத்தை இப்போது எடுக்க வேண்டாம் என முடிவு எடுத்து தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லிவிடுகிறாராம்.
இதை கேள்விப்பட்ட நடிகர் சிவகுமார் நேரடியாக பேச இப்போ இயக்குனருக்கு யார் தான் வேண்டுமா என கேட்டிருக்கிறாராம். இயக்குனர் இப்படத்தில் சத்யராஜ் சாரினை கேட்பதாக கூற, முதல்முறையாக நேரடியாக சத்யராஜை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சிவகுமார்.
இயக்குனர் நீ தான் வேண்டும் என கேட்கிறார். இந்த படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறினாராம். சிவகுமார் சொன்ன ஒரே காரணத்தால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் சத்யராஜ்.
அவர் சொல்லிய காரணத்தால் மட்டுமே படத்தில் நடிக்க வந்த சத்யராஜ் இருக்கு அடுத்த சில நாட்களில் படம் பிடித்துப் போகி இயக்குனரை அழைத்து நல்லவேளை இந்த படத்தை மிஸ் பண்ண பார்த்திருப்பேன் என வருத்தம் தெரிவித்ததாகவும் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்து இருக்கிறார்.