தனுஷும் இல்ல.. எஸ்கேவும் இல்ல! ‘ஜின்’ பட இயக்குனரை கதறவிட்ட அந்த நடிகர் இவர்தான்

by ROHINI |   ( Updated:2025-05-23 13:45:25  )
dhanush
X

dhanush

முகேன் ராவ் நடிப்பில் டி.ஆர். பாலா இயக்கத்தில் வெளியாகக் கூடிய திரைப்படம் ஜின். இந்தப் படத்தை டி.ஆர் பாலா எழுதி இயக்கியிருக்கிறார். உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக மாறியிருக்கிறார் டி.ஆர் பாலா. இவர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவருடைய ஆதங்கத்தையும் வேதனையையும் பகிர்ந்து மிகவும் மனவேதனை அடைந்தார். அவர் ஒரு நடிகரின் பெயரை குறிப்பிடாமல் அந்த நடிகரால் தான் பட்ட கஷ்டத்தை கூறியிருந்தார்.

உடனே அந்த நடிகர் தனுஷ் தான் என்றும் சிவகார்த்திகேயன் என்றும் பல பேர் கமெண்ட்களில் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் டி. ஆர் பாலாவை வேதனை படுத்தியது தனுஷோ சிவகார்த்தியனோ இல்லை. எஸ்.ஜே. சூர்யாதான் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறினார். முதலில் ஜின் பட இயக்குனரை இந்தளவு வேதனைப்படுத்திய சம்பவம் என்ன என்பதை பார்ப்போம்.

அதாவது ஒரு கதையை தயார் செய்து அதற்கு ஏற்ப ஒரு தயாரிப்பாளரையும் போய் பார்த்திருக்கிறார் டி.ஆர். பாலா. அந்த தயாரிப்பாளர் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என ஏற்கனவே நினைத்திருந்தாராம். டி. ஆர். பாலா சொன்ன கதை அந்த தயாரிப்பாளர்க்கு பிடித்து போக எஸ்.ஜே. சூர்யாவிடம் அனுப்பியிருக்கிறார். அதற்கு எஸ்.ஜே.சூர்யா இந்த கதைக்கு ஒரு ஆறு முறை விவாதிப்போம் என சொல்லி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடத்தி விட்டாராம் எஸ்.ஜே. சூர்யா.

அதிலும் சின்ன சின்ன கரெக்‌ஷன்ஸ் எல்லாம் சொல்லவும் செய்திருக்கிறார். இதற்கிடையில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு வேறொரு படம் மிகப்பெரிய வெற்றியடைய அவருடைய மார்கெட் மிகவும் உயர்ந்துவிட்டதாம். இருந்தாலும் டி. ஆர். பாலா விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவை போய் பார்த்திருக்கிறார். டி.ஆர். பாலாவை பார்த்ததும் உன்னை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை என்று கூறினாராம்.

இருந்தாலும் டி.ஆர். பாலா இதற்கு முன் நடந்த எல்லாவற்றையும் சொல்ல சரி கதையை சொல் என கேட்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. கதையை மீண்டும் முழுவதுமாக சொல்ல டி.ஆர் பாலாவை எஸ்.ஜே. சூர்யா நீயெல்லாம் ஒரு இயக்குனரா? இயக்குனர் ஆவதற்கு தகுதி இருக்கா என்றெல்லாம் கேட்டு திட்டிவிட்டாராம். உனக்கு எல்லாம் படம் பண்ண முடியாது என்றும் சொல்லிவிட்டாராம்.

sj surya

இந்த பக்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் எஸ்.ஜே. சூர்யாவுக்காகத்தான் இந்த படத்திற்கு நான் ஓகே சொன்னேன்.அவர் இல்லாமல் படம் பண்ணமுடியாது என்று சொல்லி மறுத்துவிட்டாராம். டி.ஆர் பாலா அழுது கொண்டே வெளியே வந்துவிட்டாராம். இதைப் பற்றி கூறிய அந்தணன் உதவி இயக்குனராக இருந்தாலும் சரி இயக்குனராக இருந்தாலும் இங்கு இருந்து போன பல இயக்குனர்களுக்கு தமிழை விட ரொம்ப மரியாதை கொடுப்பது தெலுங்கு நடிகர்கள்தான் என அந்தணன் கூறினார்.

Next Story