அனிருத்தை விட்டு அந்த இசையமைப்பாளரிடம் போன எஸ்.கே!.. நம்பவே முடியலயே!....

Sivakarthikeyan: சினிமாவில் சில கூட்டணிகளை பிரிக்கவே முடியாது. வெற்றிமாறன் - ஜிவி பிரகாஷ், செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா என சில கூட்டணிகள் இணைந்து நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது அவரின் எல்லா படங்களுக்கும் இமான் இசையமைத்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான். ஒரு கட்டத்தில் அந்த கூட்டணி பிரிந்துவிட்டது.
சிவகார்த்திகேயனுக்கு அனிருத் இசையமைத்த முதல் படம் எதிர் நீச்சல். இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். அதன்பின் காக்கி சட்டை, ரெமோ படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார். அனிருத்துக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே நல்ல நட்பு உண்டாக ‘இனிமேல் என் படங்களுக்கு அனிருத்தே இசை’ என சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.
அதேபோல், தனுஷின் எல்லா படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்து வந்தார். இந்த கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளிவந்தது. ஆனால், அனிருத் சிவகார்த்திகேயனுடன் நெருக்கமானதால் தனுஷ் - அனிருத் கூட்டணி முறிந்தது. அதேபோல், சென்னை 28 முதல் கோட் வரை வெங்கட் பிரபு இதுவரை இயக்கி எல்லா படங்களுக்கும் அவரின் சகோதரர் யுவன் சங்கர் ராஜாதான் இசை.
‘வெங்கட் பிரபு கேமரா இல்லாமல் கூட படமெடுப்பார். ஆனால், யுவன் இல்லாமல் படமே எடுக்கமாட்டார்’ என ரசிகர்களும், திரையுலகினரும் கிண்டலடிப்பதுண்டு. தற்போது சிவகார்த்திகேயனால் இந்த கூட்டணி பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு அனிருத்தே இசை. சிவகார்த்திகேயன் பிடிவாதமாக இருந்ததால் வெங்கட்பிரபு எதுவும் சொல்ல முடியாத நிலை.
அதேநேரம் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளாராம். இதற்கு சிவகார்த்திகேயன் எப்படி சம்மதித்தார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். திரையுலகில் பலரும் இதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.