1. Home
  2. Cinema News

KPY Bala: ‘காந்திகண்ணாடி’ படத்தால் பாலாவுக்கு வந்த சிக்கல்! நல்லது செஞ்சா புடிக்காதே

KPY Bala: ‘காந்திகண்ணாடி’ படத்தால் பாலாவுக்கு வந்த சிக்கல்! நல்லது செஞ்சா புடிக்காதே

KPY Bala:

இப்போது பரபரப்பாக பேசப்படும் செலிபிரிட்டியாக மாறியிருப்பவர் கேபிஒய் பாலா. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் தட்டிச் சென்றார். ஆரம்பத்தில் பல கேலி கிண்டல்களுக்கும் ஆளானார் பாலா. அவர் உருவத்தை பலரும் பலவிதமாக கிண்டல் செய்து வந்தனர்.

பாலாவின் வளர்ச்சி:

இருந்தாலும் அது எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் மூலம அவருக்கு பேரும் புகழும் வந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்திற்கு பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வந்தார். அதன் விளைவு சின்ன சின்ன படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்க இவருக்கு வாய்ப்பு வந்தது.

அதன் மூலம் ஏராளமான நடிகர் நடிகைகளின் கவனத்தையும் ஈர்த்தார் பாலார். குறிப்பாக இளம் நடிகைகள் மேடை ஏறினால் போதும் இவரின் காமெடியான பேச்சால் எப்படியாவது அந்த நடிகைகளை தன் பக்கம் ஈர்க்க வைப்பது அனைவரையும் ரசிக்கும் படியாக இருந்தது. இப்படித்தான் தொடர்ந்து லைம் லைட்டில் தன்னை வைத்து வருகிறார்.

சமூக சேவை:

கேபிஒய் பாலா என்றாலே அனைவரும் சொல்வது அவர் செய்யும் நன்மைகள் பற்றித்தான். யாருனே தெரியாதவர்க்ளுக்கு ஓடி ஓடி இவர் செய்யும் உதவி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. நிகழ்ச்சியில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து மற்றவர்களுக்க் இன்று வரை பாலா உதவி செய்து வருகிறார். இதைப் பற்றிகூட விஜய்சேதுபதி சமீபத்தில் கூறும் போது ‘பாலா எல்லாவற்றையும் கொடுத்துவிடாதே. உனக்குனு எதாச்சும் வைச்சுக்கோ’என்று கூறியிருந்தார்.

குறிப்பாக கொரானா காலத்தில் ஆம்புலன்ஸ் வழங்குவது, வெள்ளக் காலத்தில் உடைமைகளை இழந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என பரபரப்பாக பேசப்பட்டார் பாலா. கோடி கோடியாக சம்பாதிக்கும் டாப் நடிகர்களே இந்த மாதிரி உதவி செய்வதில்லை. பாலாவால் எப்படி இதெல்லாம் முடியும்? என்றெல்லாம் பல பேர் கூறி வந்தார்கள்.

பாலா மீதான சர்ச்சை:

ஏன் இப்பொழுது கூட அவர் செய்யும் இந்த சேவைகளை பற்றி பல விவாதங்கள் சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. கூல் சுரேஷும் பாலாவை கடுமையாக விமர்சித்தார். இதில் பத்திரிக்கையாளர் உமாபதி குறிப்பிடும் போது ஆம்புலன்ஸ்கள் எல்லாம் பாலாவின் ஏமாற்று வேலை என விமர்சித்திருக்கிறார். அதாவது,

  • பணம் எங்கிருந்து வருகிறது?
  • அந்தளவுக்கு பாலா சம்பாதித்துவிட்டாரா?
  • ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனங்கள் என அவர் பெரும் தொகை செலவழிக்கவேண்டும்
  • உழைப்பால் திரட்டிய பணம் என்றாலும் சந்தேகமாக இருக்கிறது, என உமாபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஹீரோவான பாலா:

இந்த நிலையில் பாலாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காந்தி கண்ணாடி. அந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை என பாலாவும் படத்தின் இயக்குனரும் மாறி மாறி புகார் கொடுத்துக் கொண்டே இருந்தனர். இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் ஏன் தியேட்டர் கொடுப்பதில் யோசிக்கப் போறோம் என்றும் தியேட்டர் உரிமையாளர்களும் கூறினார்கள்.

இதற்கிடையில் பாலா மீது சிவசேனா கட்சியினர் தற்போது புகார் ஒன்றை கொடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது காந்தி கண்ணாடி படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக கூறி பாலா மீதும் படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அந்த கட்சியினர் புகார் கொடுத்திருப்பதாக தெரிகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.