சொந்த பணத்துல சூனியம்னு சொல்லுவாங்க! ‘வேட்டையன்’ விஷயத்துல உல்ட்டாவா இருக்கே

by rohini |
vettaiyan
X

vettaiyan

வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸான நிலையில் தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டமாக வந்து படத்தை கண்டுகளித்தனர். ஆரம்பத்தில் வேட்டையன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனமே எழுந்தது. ஆனால் போகப் போக மக்கள் பார்த்த பிறகு பாஸிட்டிவான விமர்சனம் இருந்து வருகிறது.

ரஜினியின் மாஸ் மற்றும் கருத்துள்ள கதை என ஒரு மிக்ஸிங் மசாலா படமாக ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். போலி என்கவுண்டர்களால் சில நேரங்களில் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக நல்ல ஒரு மெசேஜை கூறியிருக்கிறார் ஞானவேல்.

அதை போல கோச்சிங் செண்டர் என்ற பெயரில் பல பேரிடம் பண மோசடி செய்யும் கும்பல் குறித்தும் படம் விளக்குகிறது. ஆக மொத்தம் இன்றைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

ஆனால் ஆரம்பத்தில் ஏன் கலவையான விமர்சனம் எழுந்தது என்பதை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சுபேர் கூறியிருக்கிறார். முன்பெல்லாம் ஒரு படத்தை ப்ரோமோட் செய்ய பத்திரிக்கைகள், குறிப்பிட்ட சேனல்கள் என இவைகளுக்குத்தான் அதிகாரம் இருக்கும். ஆனால் சோசியல் மீடியா வளர்ந்த பிறகு யார் வேண்டுமானாலும் படத்தை பற்றி விமர்சிக்கலாம் என்ற போக்கு மாறியுள்ளது.

அதனால் யூடியூப்பில் படத்தை பற்றி ரிவியூவ் செய்யும் சில கும்பல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமே பெரிய அளவில் பணம் கேட்டார்களாம். அதாவது பணம் கொடுத்தால் படத்தை பற்றி நேர் மறையான கருத்துக்களை சொல்கிறோம் என கூறி பேரம் பேசியிருக்கிறார்கள். ஆனால் லைக்காவோ இனிமே இப்படி கூறி போன் வந்தால் ரிக்கார்டு செய்து புகார் கொடுத்துவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.

அதனால்தான் லைக்காவிற்கு பாடம் புகட்டவே ஆரம்பத்தில் எதிர்மறையான கருத்துக்களை கூறி பரப்பினார்கள். மேலும் அவர்களாகவே சில பேரை செட் செய்து படம் பார்த்து வெளியே வரும் போது எதிர்மறையான விமர்சனத்தை சொல்லும் படியும் கூறி பணத்தை கொடுத்து செட் செய்திருக்கிறார்கள் என சுபேர் கூறியிருக்கிறார்.

Next Story