தியேட்டர்காரங்களுக்கு நஷ்டம்!.. இது என்னடா 400 கோடி வசூல் பண்ண கோட்டுக்கு வந்த சோதனை!..
லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு சொன்ன கதைக்கு ஓகே சொன்னார் விஜய். அப்படி உருவான திரைப்படம்தான் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் வருவார்கள் என விஜயே எதிர்பார்க்கவில்லை. ‘பிரசாந்த்லாம் அப்பவே பெரிய ஹீரோ. என் படத்தில் அவரா?’ என வெங்கட்பிரபுவிடம் கேட்டார் விஜய்.
வெங்கட்பிரபு அவரை சம்மதிக்க வைத்து படத்தை இயக்கினார். வயதான மற்றும் இளமையான விஜய் என ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போஸ்டரை பார்த்தவர்கள் இது ஜெமினி மேன் எனும் ஹாலிவுட் படத்தின் காப்பி என்றார்கள். அதற்கேற்ப ஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜயை இளமையாக காட்ட ஹாலிவுட்டுக்கு போனார் வெங்கட்பிரபு.
அடுத்தடுத்த போஸ்டர்களாலும், அப்டேட்டுகளாலும் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போனது. அதேசமயம், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. படத்தில் பாடல்களை பார்த்தபின் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பாடல்கள் பிடித்துப்போகும் என சொன்னார் வெங்கட்பிரபு.
கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இதில், தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளில் மட்டுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, தயாரிப்பாளர் கணக்குபோட்ட லாபம் இப்படத்திற்கு கிடைக்கவில்லை.
படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 400 கோடியை தாண்டி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால், தமிழகத்தில் முதல் வாரம் மட்டும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருந்தது. 2ம் வாரத்திற்கு பின் தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய லாபம் இல்லை என ஏற்கனவே சில தியேட்டர் அதிபர்கள் சொன்னார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் மினிமம் கேரண்டி அடிப்படையில் கோட் படத்தை வெளியிட்ட 5 சதவீத தியேட்டர் அதிபர்களுக்கு இப்படம் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. விரைவில், இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ராகுலை சந்தித்து இதுபற்றி சொல்லி அந்த தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் வராதவகையில் ஏதேனும் செய்வோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இந்த தகவலை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.