தம்பிகளா!.. வெட்கமா இருக்கு.. மண் சோறு சாப்பிட்டவர்களை திட்டிய சூரி!...

பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சூரி. வெண்ணிலா கபடக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரை மேலும் பிரபலப்படுத்தியது.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என பல நடிகர்களின் படங்களிலும் காமெடி செய்தார். வெற்றிமாறன் தான் இயக்கிய விடுதலை படத்தில் சூரியை நடிக்க வைக்க சூரி இனிமேல் ஹீரோ என்கிற இமேஜ் உருவானது. அந்த படம் வெற்றியடையவே சூரி தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார்.
அப்படி அவர் நடித்து வெளியான கருடன் படமும் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதன்பின் மாமன், மண்டாடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் மாமன் திரைப்படம் இன்று காலை வெளியானது. இந்த படம் செண்டிமெண்ட் காட்சிகளை கொண்ட படமாக உருவாகியுள்ளது. படத்தில் காமெடி இல்லை என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
இந்நிலையில். மதுரையை சேர்ந்த சில ரசிகர்கள் மாமன் படம் வெற்றியடைய வேண்டும் என வேண்டி மண் சோறு சாப்பிட்டார்கள். இது தொடர்பான வீடியோக்கள் டிவிகளில் செய்தியாக வெளியானது. புளூசட்ட மாறன் போன்றவர்கள் இந்த செய்தியை பகிர்ந்து ‘தலீவரின் (ரஜினி) வழியில் ரசிகர்களை தவறாக வழி நடத்தும் சுமால் சூப்பர் ஸ்டார் சூரி’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டது தவறான விஷயம் என் சூரி கருத்து தெரிவித்திருக்கிறார். மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. தம்பிகளா. இது மிகவும் முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி ஓடும்?.. மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த காசுக்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இதுபோன்ற செய்தலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்க கூட தகுதியவற்றவர்கள்’ என கருத்து கூறியிருக்கிறார்.