காமெடியன் டூ ஹீரோ.. ஒரே நாளில் ரிலீஸாகும் சூரி, யோகிபாபு, சந்தானத்தின் படங்கள்

soori
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோக்களாக பல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானம் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சிக்கு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதன் பிறகு மன்மதன் படத்தின் மூலமாகத்தான் காமெடியனாக அறிமுகமானார். சிம்பு தான் இவரை முதன் முதலில் வெள்ளி திரையில் அறிமுகம் செய்து வைத்தது.
dd
அதிலிருந்து தொடர்ந்து சிம்புவின் படங்களில் காமெடியனாக நடித்து அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து இவருடைய காமெடியும் வொர்க் அவுட் ஆக தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் சந்தானம். ஹீரோ கால்சீட் கிடைக்கிறதோ இல்லையோ சந்தானத்தின் கால்ஷீட் கிடைப்பதே மிகவும் அரிதாக இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தானும் ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில் ஹீரோவாக களமிறங்கினார் சந்தானம்.
yogibabu
ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுக்க சமீப கால படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை .இந்த நிலையில் அவர் மீண்டும் காமெடியனாக சிம்புவின் 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதைப்போல சூரியும் ஆரம்பத்தில் காமெடியனாக இருந்து விஜய் அஜித் என அனைத்து ஹீரோக்களுடனும் நகைச்சுவை செய்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார்.
அவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறக்கினார் .அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய சூரியும் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதேபோல யோகி பாபுவும் காமெடியில் கலக்கி வந்தாலும் கதையின் நாயகனாக ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார் யோகி பாபு .
maaman
இந்த நிலையில் மே 16ஆம் தேதி இந்த மூன்று ஹீரோக்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. சூரி நடிக்கும் மாமன் திரைப்படமும் சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் யோகி பாபு நடிக்கும் ஜோரா கைய தட்டுங்க திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக ஜொலித்து வரும் இந்த மூன்று நடிகர்களும் ஒரே தேதியில் போட்டி போடுவது இதுதான் முதல் முறை. இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.