பூஜா ஹெக்டேவை விட சௌபின் ஸ்கோர் பண்ணிட்டாரே!.. என்னா டேன்ஸ்!...

Monica song: மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் சௌபின் சாஹிர். திறமையான நடிகர். காமெடி, வில்லன், குணச்சித்திரம் என என்ன மாதிரியான வேடம் என்றாலும் அசத்தலாக நடிப்பார். மலையாள நடிகர்கள் என்றாலே மிகவும் இயல்பாக நடிப்பார்கள் அதில் சௌபின் சாஹிர் முக்கியமான நடிகர். திரையில் பார்க்கும் போதும் இவர் நடிக்கிறார் என்கிற உணர்வே ரசிகர்களுக்கே வராது.
மஞ்சுமெல் பாய்ஸில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். பள்ளத்தில் விழுந்த நண்பனை இவர்தான் கீழே இறங்கி தூக்கி வருவார். அதில் அசத்தலாக நடித்திருப்பார். கும்பலாங்கி நைட்ஸ், வைரஸ், டிரான்ஸ், இருள், சுருளி, சிபிஐ 5: தி பிரைன், கோல்ட் உள்ளிட்ட பல படங்களிலும் இவரின் நடிப்பு பேசப்பட்டது. பிரேமம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருப்பார்.

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கேங்ஸ்டர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். முதன்முறையாக ஒரு நேரடி படத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருக்கிறார்.
சௌபின் சாஹிர் மட்டுமின்றி நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்தியராஜ் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற சிக்கிடு பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடலை சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். மேலும், சௌபின் சாஹிரும் நடனமாடியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பூஜா ஹெக்டேவை விட சௌபின் அசத்தலாக நடனாமடியிருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரேமம் படத்தில் கல்லூரியில் வேலை செய்யும் சௌபின் ‘எனக்கு ஒரு ஸ்டெப் கூட ஆட தெரியாது’ என சொல்வார். இப்போது சௌபின் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து 10 வருடம் கழித்து சௌபின் தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார் என மீம்ஸ் போட்டு வருகிறார்கள். மொத்தத்தில் மோனிகா பாடலில் பூஜா ஹெக்டேவை விட சௌபின் ஸ்கோர் செய்துவிட்டார் என்றே பார்க்கப்படுகிறது.