ஒன்னுமே சொல்லாம பாட வச்சீட்டிங்களே!.. மணிரத்னம் படத்தில் எஸ்.பி.பிக்கு நடந்த சம்பவம்!..

பல ஆயிரம் பாடல்களை பாடி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்திய திரையுலகில் அதிக பாடல்களை படியவர், அதிக இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர், அதிக நடிகர்களுக்கு பாடியவர் என பல சாதனைகளை செய்தவர்.

இப்போது வரை அந்த சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை. கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே பாடல்களை பாட துவங்கியவர் எஸ்.பி.பி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுக்கும் பாடியிருக்கிறார். அதன்பின் இளையராஜாவின் இசையில் ரஜினி, கமல், மோகன், ராமராஜன், பிரபு, சத்தியராஜ், கார்த்திக் என 80களில் ஹீரோவாக கலக்கிய நடிகர்களுக்கு பாடினார்.

அதன்பின், அவர்களுக்கு பின் வந்த முரளி, அஜித், விஜய் போன்ற பலருக்கும் பாடினார். ஒரே நாளில் 18 பாடல்களை பாடி சாதனை செய்திருக்கிறார். இளையராஜாவின் இசையில் அவர் பாடியது எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். இப்போதும் 80 கிட்ஸ்களின் பயணங்களை எஸ்.பி.பி.தான் ரசிக்க வைக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உருது என பல மொழிகளிலும் பாடி அசத்தி இருக்கிறார். பல இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடியிருக்கிறார். பொதுவாக ஒரு பாடல் உருவாகும் போது திரைப்படத்தில் அந்த பாடல் என்ன சூழ்நிலையில் வருகிறது, அந்த பாடலை பாடும் கதாநாயகனின் மனநிலை என்ன என எல்லாமே பாடகருக்கு சொல்லப்படும்.

ஜாலியாக பாடும் எஸ்.பி.பி. சோகமாகவும் பல பாடல்களை பாடியிருக்கிறார். அந்த பாடல்களை கேட்டால் உண்மையிலேயே அவர் அழுதுகொண்டே பாடியது போல இருக்கும். ஆனால், சோகமா, சந்தோஷமா என எதுவுமே தெரியாமல் எஸ்.பி.பி பாடிய சம்பவம் பற்றி இங்கே பார்ப்போம்.

மணிரத்னம் இயக்கத்தில் மோகன் நடித்து உருவான திரைப்படம் மௌன ராகம். இந்த படத்தில் ‘நிலாவே வா செல்லாதே வா’ என்கிற பாடலை பாடியிருப்பார் எஸ்.பி.பி. இப்போதும் பலராலும் இந்த பாடல் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலை பாட ரெக்கார்டிங் தியேட்டருக்கு எஸ்.பி.பி சென்றபோது அங்கே இளையராஜா இல்லை. காட்சியை விளக்க மணிரத்தினமும் இல்லை.

டியூனை கேட்டுவிட்டு ஜாலியான பாடல் என நினைத்து சிரித்துகொண்டே பாடிவிட்டு போய்விட்டாராம் எஸ்.பி.பி. படத்தில் பார்க்கும்போதுதான் அவருக்கு அது ஒரு சோக பாடல் என்பது தெரிந்திருக்கிறது. முன்பே சொல்லியிருந்தால் ‘நான் சோகமாக பாடியிருப்பேன்’ என சொல்லி இருக்கிறார். ஆனாலும், அந்த பாடல் அந்த காட்சிக்கு கட்சிதமாக பொருந்தி போனதுதான் உண்மை.

Related Articles
Next Story
Share it