நல்லவனா நடிச்சாதான் புருசன்!.. ரவி மோகனின் ப்ரோ கோட் புரமோ வீடியோ ரிலீஸ்..
Bro Code Promo: இதுவரை நடிகர் ஜெயம் ரவியாக இருந்தவர் இப்போது ரவி மோகனாக மாறி தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். ரவி மோகன் புரொடக்ஷன் என்கிற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் விமர்சியாக நடந்தது. இந்த விழாவில் அவரின் தோழி கெனிஷா, நடிகர்கள் சிவ்ராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
துவக்கத்திலேயே இந்த நிறுவனம் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது. அதில் ஒரு படத்தை ரவி மோகனை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு An Ordinary Man என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு முன்பு சந்தானத்தை வைத்து வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா போன்ற சில படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஜெயம் ரவி, எஸ்.ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன் ஆகியோரின் நடிப்பில் ப்ரோ கோட்(Bro Code) என்கிற படம் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. சுமார் ஐந்து நிமிடம் போடும் இந்த வீடியோவில் ரவி மோகன், எஸ்.ஜே சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோரின் மனைவிகள் இவர்கள் மூவரை பற்றியும் பெருமையாக பேசும் படி காட்சிகள் இருக்கிறது. ஆனால் வீடியோ முடியும்போது இவர்கள் மனைவியை ஏமாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது போல காட்சிகள் வருகிறது.
அதாவது மனைவியிடம் நல்லவனாகவும் நடிக்கும் கதாபாத்திரங்களில் இவர்கள் மூவருரும் நடித்துள்ளனர். மேலும் மனைவியை விட்டு எஸ்கேப் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் அதை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
