NEEK படத்தின் ஆடியோ லான்சுக்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட்!.. எல்லாமே சரியா சிங்க் ஆகுதே!..

by Ramya |
neek movie
X

Actor Dhanush: தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது நிற்க கூட நேரம் இல்லாமல் படங்களில் நடித்து வருகின்றார். பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த தனுஷ் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

கடைசியாக தனது 50வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் தனுஷ்.


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த திரைப்படத்தை நடிகர்களை மையமாக வைத்து இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகள் பவிஷை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ் வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலமாக படத்தை தயாரிக்கவும் செய்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆடியோ லான்ச்: படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் நேற்று சென்னையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்து கொண்டு படம் குறித்து பேசி இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சைமுத்து, போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவருமே நடிகர் தனுஷை வைத்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கப் போகும் இயக்குனர்கள் ஆவார்கள்.

தனுஷின் அடுத்தபட இயக்குனர்கள்: நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.


அதனைத் தொடர்ந்து லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆடியோ லான்ச் மூலமாக இது அனைத்தும் உறுதியாக இருக்கின்றது. இவர்கள் அடுத்தடுத்து நடிகர் தனுஷை வைத்து புதிய திரைப்படங்களை இயக்கப் போகின்றார் என்பது உறுதியாகி இருக்கிறது.

Next Story