இதுதான் நெபோடிசம்!.. ஸ்ரீதேவி பெயரை நாறடிக்கும் மகள்!.. நடிக்கத்தெரியாதவருக்கு எத்தனை சான்ஸ்?..

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. அவர் மறைந்த பின்னர் அவரது இரு மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் படங்களில் நடித்து வருகின்றனர்.
ஜான்வி கபூர் பெரிதாக நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றாலும் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்து வருகிறார். அதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அடுத்து ராம்சரண் படத்திலும் அவர் நடித்து வருவது தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் போனிகபூர் மற்றும் ஸ்ரீதேவிக்கு 2வது மகளாகப் பிறந்த நடிகை குஷி கபூர் ஆர்ச்சிலிஸ் எனும் நெட்பிளிக்ஸ் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக அளவில் விமர்சிக்கப்பட்டவர், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இவானா நடித்த கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அமீர்கான் மகன் ஜுனாயத் கான் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படம் பார்க்கவே சகிக்கவில்லை என ரசிகர்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இந்நிலையில், சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் அலிகான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிப்பில் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான Nadaaniyan படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு பெயர் தான் நெப்போடிசம், நல்லாவே நடிக்கத் தெரியாத இருவரையும் படத்தில் போட்டு பல கோடி செலவு செய்து படமெடுத்து ரசிகர்களை முட்டாளாக மாற்றுகின்றனர். தலைவலி தான் மிச்சம் என வறுத்து எடுத்து வருகின்றனர்.
தமிழில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் பவிஷ் எப்படி ஹீரோவாக அறிமுகமாகி சொதப்பினாரோ அதே போல அங்கே ஒரு நெபோடிச குப்பை வெளியானதாக போட்டு புதைத்துவிட்டனர்.