விஜய், அஜித்துக்கே நோ சொன்ன நடிகை… அனிருத் கூட மட்டும் இப்படி இறங்கிட்டாரே?

Anirudh: தமிழ் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் இதுவரை தமிழில் நடிக்காத நடிகை ஒருவர் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு இசையமைப்பாளருக்கு மிகப்பெரிய புகழ் வட்டம் இருக்கும். தற்போது அந்த கிரீடத்தை சுமந்து வருபவர் அனிருத் தான். கடந்த வருடத்திலிருந்து அவர் இயக்கத்தில் வெளியாகும் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், உலகநாயகன் கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்குமே மாஸ் பாடல்களை உருவாக்கி அதை வெற்றியும் கண்டுவிட்டார்.

தற்போதும் பரபரப்பாக இயங்கி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் தளபதி 69, ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் கூலி திரைப்படங்கள் என எல்லாவற்றிற்குமே அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இப்படி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அனிருத் மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆல்பத்தில் நடிக்க நடிகை ஸ்ரீ லீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் பாடல் இதுவாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஸ்ரீலீலாவை கேட்ட போது அவர் மறுத்துவிட்டார். அதுபோலவே, கோட் படத்தில் மட்ட பாடலுக்கும் முதலில் நடனமாட ஸ்ரீலீலாவை அணுகிய போது ஒற்றை பாடலுக்கு ஆட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it