ரஜினி வேறலெவல்!.. எதிர்பார்க்கவே இல்ல!.. கூலி அனுபவம் பேசும் ஸ்ருதிஹாசன்!...

by MURUGAN |
coolie
X

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம்தான் கூலி. லோகேஷும் ரஜினியும் முதன் முறையாக ஒன்றாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ரஜினி என்றாலே மாஸ் ஆக்சன் படமாக இருக்கும். அதில். லோகேஷும் இணைந்தால் என்னவாகும் என்பதே இதற்கு காரணம்.

ஜெயிலர் போல வசூலை அள்ளுவதற்காக இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹர், உபேந்திரா என ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு நடிகரை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஏனெனில், கூலி படத்தை பேன் இண்டியாக படமாக பல மொழிகளிலும் வெளியிட்டு 1000 கோடி வசூலை அடிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.


இத்தனை நடிகர்கள் மட்டுமில்லாமல் ஒரு கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்திருக்கிறார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது போல கூலி படத்தில் அமீர்கான் வேடம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த படத்தில் நடிகர் சத்தியராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

லோகேஷின் ஸ்டைலில் வழக்கம்போல் இந்த படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ‘சிக்கிடு’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், 2 நாட்களுக்கு முன்பு 2வது பாடலும் வெளியானது. படத்தில் இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். கூலி படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.


இந்த படத்தில் சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி பேசியிருக்கிறார். என் அப்பா கமலும் ரஜினி சாரும் தமிழ் சினிமாவில் முக்கிய தூண்கள். மற்றவர்களை போலவே நானும் ரஜினியை சூப்பர்ஸ்டாராகவே பார்த்தேன். ஆனால், அவருடன் நடிக்கும்போது அவர் வேறுமாதிரி இருந்தார்.

புதுப்புது விஷயங்களை செய்கிறார். மிகவும் ஷார்ப்பாக இருக்கிறார். மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார். சூப்பர்ஸ்டார் என்கிற பந்தாவெல்லாம் அவரிடம் இல்லை. ‘நீங்கள் எப்போதும் கூலாக இருக்கிறீர்கள். உங்களிடம் பேசுவது மிகவும் சுலபமாக இருக்கிறது’ என அவரிடமே சொன்னேன். செட்டில் பாசிட்டிவ்வான எனர்ஜியை அவர் கொண்டு வருகிறார். அவருடன் எல்லோரும் மகிழ்ச்சியாக வேலை செய்கிறார்கள்’ என பேசியிருக்கிறார்.

Next Story