SSMB29: ராஜமௌலி - மகேஷ் பாபு பட அப்டேட் வருது!.. சும்மா சரவெடி!...
நான் ஈ, மகதீரா உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் ராஜமௌலியை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் உருவாகி ஒரு ஃபேன் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி 2 வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூலை பெற்றது.
அதன்பின் RRR என்கிற திரைப்படத்தை ராஜமௌலி இயக்கினார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. சிறந்த வெளிநாட்டு மொழி பாடல் என்கிற பிரிவில் இப்படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.
தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோரை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாததால் படக்குழு SSMB29 என அழைத்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அப்டேட் நவம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. கடந்த 1ம் தேதி படத்தின் ‘அப்டேட்டை எப்போது வெளியிடுவீர்கள்? என ட்விட்டரில் மகேஷ் பாபு ராஜமௌலியிடம் கேட்டார்.
அதோடு இந்த மாதம் பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்தில் இருக்கிறார் என்றும் சொன்னார். ‘அமைதியாக இரு.. எதையும் சொல்லாதே’ என ராஜமௌலி பதிலளிக்க ‘எதை சொல்கிறீர்கள்? பிரித்திவிராஜையை சொல்கிறீர்களா?’ என சொல்லி என்று அந்தப் படத்தில் பிரித்திவிராஜ் நடிப்பதையும் உறுதி செய்தார் மகேஷ் பாபு. ஒரு கட்டத்தில் ‘நீ எல்லாவற்றையும் சொல்லி விட்டாய்’ என சொன்னர் ராஜமவுலி.
இந்நிலையில் SSMB29 படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவை இந்த மாதம் 16ம் தேதி ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. எனவே ராஜமௌலி ரசிகர்களுக்கு இது சரவெடியாக அமையப்போகிறது. இந்த படத்திற்கு வாரணாசி என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இது உண்மையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
