மியூசிக் போட சொல்லி கேட்கப்போன சசிக்குமார்!.. படத்தையே ஆட்டய போட்ட விஜய் ஆண்டனி!..
Vijay Antony: இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி அதிலும் தனி முத்திரையை பதித்தவர் விஜய் ஆண்டனி, இவர் நடித்ததில் 70 சதவீத படங்கள் வெற்றி படங்கள்தான், அதிலும் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றது, இந்த படம் விஜய் ஆண்டனியை கோலிவுட்டின் ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ஆந்திராவிலும் நல்ல வசூலை பெற்றது. அப்போது முதலே விஜய் ஆண்டனியின் எல்லா திரைப்படங்களும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிறது.
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. அதோடு வழக்கமாக சினிமாவில் இருக்கும் செண்டிமெண்ட்டை பார்க்காமல் தனது படத்திற்கு எமன், பிச்சைக்காரன், ஹிட்லர் என நெகட்டிவாக தலைப்பு வைப்பார். கடந்த சில வருடங்களில் இவரின் நடிப்பில் வெளியான கொலை, ரத்தம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் ஹிட் அடிக்கவில்லை. எனவே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மார்கன் படத்திற்கு பின் அவர் நடிப்பில் உருவான சக்தி திருமகன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில்தான் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணையும் நூறு சாமி படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. தற்போது இந்த படம் எப்படி உருவானது என்பதன் பின்னணி தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சசிக்குமார்தான். அதோடு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அவருடன் நடித்த மிதுனும் இந்த படத்தில் நடிக்கவிருந்தார்.
இந்த படத்தில் இசையமைப்பதற்காக விஜய் ஆண்டனியை சந்திக்க சசிக்குமார் சென்றிருக்கிறார். அப்போது இந்த படத்தின் கதையை கேட்டு ‘இந்த படத்தில் நானே நடிக்கிறேன்’ என விஜய் ஆண்டனி சொல்ல தற்போது இந்த படத்தின் ஹீரோவாக விஜய் ஆண்டனி மாறிவிட்டார்.
அதேநேரம் இப்படத்தின் இரண்டாம் பாதியில்தான் விஜய் ஆண்டனி வருவார். இது விஜய் ஆண்டனி மையப்படுத்திய கதை இல்லை எனவும் சொல்லப்படுகிறது. இப்படம் 2026 மே மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்த ஸ்வசிகா, ஜெய்பீம் படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
