சிம்புவுக்கு அடுத்து வரப்போகும் படங்கள்... தக்லைஃப்புக்குப் பிறகு மார்க்கெட் ஏறுகிறதா?

by sankaran |   ( Updated:2024-10-09 05:30:44  )
str
X

சிலம்பரசன் ஒரு காலத்தில் தந்தை டி.ராஜேந்தரின் படங்களில் சிறுவனாக நடித்து வந்து அசத்தினார். அப்போதே அவரது நடிப்பு ஸ்மார்ட்டாக இருந்தது. டவுசர் போட்டுக் கொண்டு அப்பாவைப் போல தலையை ஸ்டைலாகக் கோதி விடுவார்.

அப்படியே சில படங்களில் நடித்த அவரை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கத் தொடங்கி விட்டனர். குறிப்பாகத் தாய்மார்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிவிட்டார். வளர்ந்ததும் தந்தையே இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் தான் காதல் அழிவதில்லை. ஆரம்பத்தில் ஸ்டைல் என்ற பெயரில் விரல் வித்தையைக் காட்டினார்.

அப்புறம் வளர வளர சினிமாவின் அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டார். படங்களை இயக்கவும் செய்தார். அவர் இயக்கிய மன்மதன் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிலம்பரசன் எஸ்டிஆராக மாறியதும் அவர் நடிப்பே தனி தான். ஸ்டைல் லுக்கில் அசத்தி வருகிறார். இடையில் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்றெல்லாம் இவரைப் பற்றிய தகவல்கள் வந்தன. 2006ல் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

லிட்டில் சூப்பர்ஸ்டாராக இருந்த சிம்பு எஸ்டிஆராக மாறி மாஸ் காட்டத் தொடங்கி இருக்கிறார். இப்போது அதிரடியாக நடித்து வரும் படம் மணிரத்னத்தின் தக் லைஃப். இந்தப் படத்தில் அவர் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மணிரத்னம், கமல் கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தில் படு மாஸாக கலக்கி இருந்தது. இப்போது 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி தக்லைஃப் படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.


இவர் மணித்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் நடித்துள்ளார். 2018ல் இந்தப் படம் வெளியானது. 6 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் படத்தில் இருந்து சிம்புவுக்கு ஏறுமுகம் என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா அவர் உலகநாயகன் உடனே இணைந்து நடித்து இருப்பதால் அவரது மார்க்கெட் எகிறி விடும்.

இப்போதே அவரிடம் பல இயக்குனர்களும் கதையைச் சொல்லி வருகிறார்களாம். ஐசரி கணேஷூக்கு ஒரு படத்தை நடித்துக் கொடுக்க வேண்டும். அதே போல தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்திலும் அவர் நடிக்க வேண்டும். ஆனா அவர் எந்தப் படத்தில் முதல்ல நடிக்கப் போறாருன்னு தெரியலை. அவரே சொன்னாத் தான் தெரியும் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

Next Story