சிம்பு காட்டுல இனி ஹாட்ரிக் தான்... நாளை வெளியாகுது சூப்பர் அப்டேட்!

by Sankaran |
str
X

தமிழ்த்திரை உலகில் நவரச இயக்குனர் என்றால் டி.ஆரைத் தான் சொல்வார்கள். இவர் படங்களில் நவரசங்களும் தாண்டவம் ஆடும். இசை என்பது இவரது நாவில் தரிகிடதோம் போடும். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இவர் தன் மகன் சிம்புவை ஆரம்பத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

விரல் வித்தை: பின்னர் அவரது திறமையைக் கண்டு கொண்டு படங்களில் கதாநாயகன் ஆக்கி விட்டார். படங்களில் விரல் வித்தையைக் காட்டி நடிக்க ஆரம்பித்தார் சிம்பு. லிட்டில் சூப்பர்ஸ்டாராக உருமாறிய சிம்புவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதன்பிறகு தனது தனித்திறன்களைப் படிப்படியாக அப்பாவைப் போல வளர்த்தார். இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக மாறிவிட்டார்.


தக் லைஃப்: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் இணைந்து தக் லைஃப் என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது மார்க்கெட் ஒரு படி மேலே ஏறிவிட்டது என்றே சொல்லலாம். இவரது புகைப்படங்களைப் பார்த்தாலே அதைக் கண்டுபிடித்து விடலாம். மீசையைக் கமல் மாதிரியே முறுக்கி விட்டபடி கெத்தாகக் காட்சி அளிக்கிறார். சமீபகாலமாக அவரது படங்கள் வெளிவரவில்லை.

பெரிய கேப் விழுந்த மாதிரி இருக்குன்னு சங்கடப்பட்ட ரசிகர்களுக்கு நாளை அவரிடமிருந்து ஒரு இனிப்பான அறிவிப்பு வெளிவர உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான் இது. வாங்க பார்க்கலாம்.நடிகர் சிம்பு குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

வருஷத்துக்கு 3 படம்: சிம்புவை ஒரு பங்ஷன்ல பார்க்கும்போது பத்து தல படத்துக்குப் பிறகு உங்க படம் ஒண்ணும் வரலயே. ரசிகர்கள் வெயிட் பண்றாங்கன்னு சொன்னேன். அதுக்கு சிம்பு, 2025-26ல பாருங்க. வருஷத்துக்கு 3 படம் கொடுக்குறேன்னாரு.

நான் அவ்ளோ ஃபாஸ்டா போகப்போறேன். நிறைய படம் நடிக்கப் போறேன்னாரு. தக்லைஃப் இருக்கு. அடுத்து அஸ்வத் மாரிமுத்து படம். பார்க்கிங் டைரக்டர் ராம்குமார் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ணப் போறாரு.

அடுத்து சிம்பு 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்துல நடிக்கிறாரு. இந்த 3 படங்கள் பற்றிய பேச்சுவார்த்தைத் தான் போய்க்கிட்டு இருக்குன்னு சொன்னாங்க. இதுதான் அறிவிப்பா வரப்போகுதுன்னாங்க.

நாளை அறிவிப்பு: இதுதவிர இன்னொரு டைரக்டர் படத்துக்கும் பேச்சுவார்த்தைப் போய்க்கிட்டு இருக்குன்னு சொன்னாங்க. என்னன்னு தெரியல. நாளைக்கு (பிப்ரவரி 3) சொல்லப் போறாரு. இதை எல்லாம் யார் தயாரிக்கப் போறாருங்கற அறிவிப்பும் நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story