STR49: பல நாள் கழிச்சி புரமோ வீடியோ விட்டா இப்படி ஒரு சிக்கலா?!.. வியூஸ் வருமா?!...

இப்போதுள்ள நடிகர்களிலேயே சிம்பு ரசிகர்கள்தான் மிகவும் பாவம். ஏனெனில், மற்ற நடிகர்களை போல சிம்பு ஆக்டிவாக நடிக்கும் நடிகர் இல்லை. பொதுவாக சிம்பு ஒரு சோம்பேறி என பலரும் சொல்வார்கள். சிறந்த நடிகராக இருந்தாலும் நடிப்பதில் அவருக்கு எப்போதும் ஒரு சலிப்பு உண்டு. இதை அவரே அவரின் நெருக்கமானவர்களில் சொல்லியிருக்கிறார்.
அதனால்தான் அவர் நடிக்கும் படங்கள் எப்போதும் பிரச்சனையில் சிக்கும். படத்தை ரிலீஸ் செய்வதே சிக்கலாக மாறும். ஒன்று சிம்பு குடைச்சல் கொடுப்பார். இல்லையெனில் வேறொருவர் மூலம் பிரச்சனை வரும். சிம்பு நடித்தால் 2 படங்கள் தோற்று அதன்பின் ஒரு படம் வெற்றி பெறும். வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைப் ஆகிய 3 படங்களும் சிம்புவுக்கு ஹிட் படங்களாக அமையவில்லை.
தற்போது வெற்றிமாறனோடு கை கோர்த்திருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பே வேகமாக துவங்கியது. வட சென்னை தொடர்பான என கதை என அறிவிக்கப்பட்டு சிம்புவை வைத்து சில நாட்கள் புரமோ ஷூட் நடத்தினார் வெற்றிமாறன். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், என்ன காரணத்தினாலோ அது தற்போது வரை வெளியாகவில்லை.
சிம்பு மற்றும் வெற்றிமாறனின் சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்பால் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பட வேலைகளை நிறுத்துவிட்டார். அதன்பின் சில நாட்கள் கழித்து இந்த பிரச்சனையை தீர்த்து பட வேலைகளை மீண்டும் துவங்கினார் வெற்றிமாறன். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ம் தேதியான நாளை இப்படம் தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். அடுத்தநாள் அதாவது 17ம் தேதி புரமோ வீடியோவை யுடியூப்பில் வெளியிடுகிறார்கள்.
தியேட்டர்களில் வீடியோவை பார்க்க 15 ரூபாய் கட்டணமும் வசூலிக்கவுள்ளனர். அதேநேரம் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தியேட்டர்களில் வீடியோ ஓடும்போது சிம்பு ரசிகர்கள் அதை மொபைலில் வீடியோவாக எடுத்து டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவிட வாய்ப்புண்டு. எனவே, அடுத்தநாள் யுடியூப்பில் வெளியாகும்போது அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. இதைப்படக்குழு மறந்துவிட்டார்கள் போல.