டிராப்புன்னு யாரு சொன்னா?.. கூலி படத்துடன் வெளியாகும் STR 49 அப்டேட்!..

STR 49: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு வேகமாக துவங்கப்பட்டது. சிம்புவை வைத்து வெற்றிமாறன் புரமோ ஷுட் வீடியோவெல்லாம் எடுக்க துவங்கினார். இந்த படம் வடசென்னை படத்தின் கிளைக்கதை எனவும், இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கப்போவாதாகவும் செய்திகள் வெளியானது.
மேலும், புரமோ ஷுட் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. வழக்கமாக தனுசுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன் இந்த முறை சிம்புவுடன் கூட்டணி வைத்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இதுவே படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

ஆனால், புரமோ ஷுட் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. மேலும் சம்பள விஷயத்தில் படத்தின் தயாராளிப்பார் தாணுவுடன் சிம்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாலும், ஒரு பக்கம் வெற்றிமாறனும் அதிக சம்பளம் கேட்டதாலும், அதிருப்தி அடைந்த தாணு படத்தையே டிராப் செய்துவிட்டதால் சிம்பு வேறு தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியானது,
ஏற்கனவே பார்க்கிங் பட இயக்குனருடன் துவங்கவிருந்த படம் டிராப் ஆன நிலையில், வெற்றிமாறன் படமும் டிராப் என செய்திகள் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். ஆனால் இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது, படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரம் துவங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் புரமோ வீடியோவை ரஜினியின் கூலி படம் வெளியாகும் ஆகஸ்ட் 14ம் தேதி தியேட்டர்களிலேயே வெளியிட திட்டமிட்டுள்ளனர் என செய்தி கசிந்துள்ளது.