
Cinema News
மீண்டும் மீண்டுமா?!.. STR49 புரமோ வீடியோவுக்கு வந்த சிக்கல்!.. ஐயோ பாவம்!….
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதுவரை தனுசுடன் மட்டுமே கூட்டணி அமைத்து வந்த வெற்றிமாறன் முதல் முறையாக சிம்புவுடன் இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே வெளியான வடசென்னை படத்தின் கிளைக் கதையாக இப்படம் உருவாகும் என வெற்றிமாறன் கூறியிருந்தார்.
சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இதற்காக பார்க்கிங் பட இயக்குனரின் படத்தையும் தள்ளி வைத்தார். வெற்றிமாறன் – சிம்பு படத்தின் புரமோ வீடியோவை சூட் பண்ணும் வேலைகள் துவங்கியது. அது தொடர்பான ஷூட்டிங் சில நாட்கள் நடந்தது.
அதில், இயக்குனர் நெல்சனும் கலந்துகொள்ள ஹைப் ஏறியது. ஆனால் சிம்பு மற்றும் வெற்றிமாறன் சம்பள பிரச்சனை காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது. அதன்பின் சிம்பு, தாணு ஆகியோரிடம் பேசி வெற்றிமாறன் சுமூக முடிவை எட்டி இப்படம் விரைவில் துவங்கும் என அறிவித்தார்.
ஒருபக்கம் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் புரமோ வீடியோ எப்போது வெளியாகும் என மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அக்டோபர் 4ம் தேதி STR49 படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரூர் சம்பவத்தால் அது தள்ளி வைக்கப்பட்டு அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ம் தேதி வெளியிடலாம் என முடிவெடுத்திருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.
ஒருபக்கம், புரோமோ வீடியோவுக்கான் பின்னணி இசையை அனிருத் இன்னும் செய்து கொடுக்கவில்லை. அதனால்தான் இது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது எனவும் சிலர் சொல்கிறார்கள். இந்த இரண்டில் எது உண்மை என்பது படக்குழுவுக்கே வெளிச்சம்.