என்னோட முதல் டீச்சர் கமல்...! விஜய்க்கு கண்ணுல தான் எக்ஸ்பிரஷன்! ஸ்டண்ட் நடிகர் பகிர்ந்த தகவல்!

by SANKARAN |   ( Updated:2025-07-20 08:42:45  )
kamal, vijay
X

ஸ்டண்ட் நடிகர் சாய் தீனா விஜய், ரஜினி, கமல் உடன் இணைந்து நடித்த சில அனுபவங்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஜில்லா படத்துல நடிச்சேன். ஆனா விஜய் சார் கூட நடிக்கல. ஆனா மோகன்லால் சார் கூட நடிச்சேன். தெறில நடிச்சேன். விஜய் சாருக்கு எக்ஸ்பிரஷன் முகத்துல இருக்காது. கண்ணுல தான் இருக்கும். சின்ன கண்ணுதான். அப்படியே விரியும். அந்தப் படத்துல நடிக்கும்போது விஜய் சார் என்னைக் கட்டிப்பிடிச்சிப் பாராட்டுனாரு.

எந்திரன் படத்துல என்னோட நடிப்பைப் பார்த்துட்டு ரஜினி சார் என் தோள்ல தட்டி சூப்பர் சூப்பர்னு பாராட்டுனாரு. பிரசாத் ஸ்டூடியோல நடந்த அந்த சம்பவத்தை இப்ப போனாலும் நினைச்சிப் பார்ப்பேன். அந்த அனுபவத்தை வாழ்க்கையிலயே மறக்க முடியாது. எங்க அப்பா, அம்மா தட்டிக் கொடுத்த மாதிரி இருந்தது.


என்னோட ஸ்லாங் எனக்கு சொல்லிக் கொடுத்தது மகாநதி சங்கர். விருமாண்டி படத்துல கமல் கூட நடிக்கும்போது கும்பல்ல ஜூனியர் ஆர்டிஸ்டா ஓடிக்கிட்டே இருப்பேன். பல படங்கள்ல அப்படி ஓடிக்கிட்டே இருந்தேன். ஆனா முதல் தடவையா எனக்கு கேரியர்ல சாப்பாடு வச்சிக் கொடுத்தது கமல் சார்தான்.

முதல் தடவையா நான் நடிக்கணும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. அவருதான் என்னோட முதல் டீச்சர். என்னை தீனான்னு கூப்பிட மாட்டாரு. சீனான்னுதான் கூப்பிடுவாரு.

ஒருத்தர் மேல அழுத்தமான கோபமாக இருக்கும்போது நீ எப்படி தாழ்ப்பாள் போடுவேன்னு போட்டுக் காட்டினாரு. அதே அது அவசரமா போடும்போது எப்படிப் போடுவேன்னு ரெண்டு மூணுவிதமா போட்டுக் காட்டினாரு. அங்கிருந்துதான் நான் நடிக்கணும்னு தேடி ஓடினது. நாசர் சார் எல்லாம் என் குரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சாய் தீனா தெலுங்கு முன்னணி நடிகர் பாலையாவுடனும் இணைந்து நடித்துள்ளார். அவரை தீனா தங்கம் தங்கம் என்று புகழ்ந்து தள்ளுகிறார். அப்பேர்ப்பட்ட மனுஷனாம் அந்த பாலையா. ஒரு படம் முழுக்க ஜாலியா சிரித்த முகத்துடன் நடிக்க ஆசைப்படுகிறார். இவர் ஆசையை யாராவது நிறைவேற்றுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story