விஷாலுக்கு ஜுரம்னு யார் சொன்னா?!. என்கிட்ட ஆதாரம் இருக்கு!. போட்டு பொளக்கும் சுசித்ரா!..

by ROHINI |   ( Updated:2025-06-28 05:11:15  )
suchithra
X

suchithra

சுசி லீக்ஸ் என்ற ஒரு விஷயம் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அல்லோலப்பட்டது. அதை பிரபல பாடகி சுசித்ராதான் வெளியிட்டார். மேலும் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார் என்றெல்லாம் பல விஷயங்கள் உலா வந்தன. இதை பற்றி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் தெளிவுப்படுத்தியிருக்கிறார். முதன் முதலில் சுசித்ரா மீது கேஸ் கொடுத்தது திரிஷா மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன்தானாம்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் , கார்த்திக்குமார், விஜய்ஜேசுதாஸ் என ஒரு நான்கு பேர் சேர்ந்துதான் சுசி லீக்ஸை வெளியிட்டார்களாம். அது சுசித்ராவுக்கே தெரியாதாம். இதோடு அவர் போதை பொருளுக்கு அடிமையானார் என்று கேஸ் கொடுத்ததும் போலீஸ் அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எல்லாவற்றையும் போலீஸ் கையகப்படுத்திவிட்டார்களாம். நல்ல வேளையாக லேண்ட் லைன் போன் மட்டும் உபயோகத்தில் இருந்ததாம்.

அப்போது சன் டிவியில் இருந்து சுசித்ராவை தொடர்பு கொண்டு பேசிய போது ‘ நான் செய்யவில்லை’ என்ற ஒரு ஸ்டேட்மெண்ட்டை மட்டும் தன்னால் கொடுக்க முடிந்தது என்று சுசித்ரா கூறினார். மேலும் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் நிறைய பேர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னதும் ஆதாரம் இருக்கிறதா என்று சுசித்ராவிடம் பல பேர் கேட்டார்கள். ஆனால் அது முட்டாள்தனமான கேள்வி. ஆதாரம் இருக்கப் போய்தான் இவ்வளவு வெளிப்படையாக சொல்கிறேன். ஆதாரம் என்பது ஒரு வேளை நான் இக்கட்டான சூழ் நிலையில் மாட்டிக் கொண்டால் நீதிமன்றத்தில் இதை காட்டி நான் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் வைத்திருப்பேன்.

இதை போய் எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை என்று சுசித்ரா கூறினார். அதன் பிறகு போலீஸ் என்னிடம் ‘வீட்டில் ஏதும் பொருள் இருக்கா? இருந்தால் கொஞ்சம் அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ரெய்டு வருகிறது’ என்று சொன்னார்களாம். எந்த போலீஸாவது இப்படி சொல்வார்களா? உடனே நான் ‘என் வீட்டில் அப்படி எதுவும் கிடையாது. சிகரெட் பிடிப்பேன். அதனால் சிகரெட் பாக்கெட்கள் இருக்கும்’ என்று சுசித்ரா சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு இரண்டு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சுசித்ரா வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதும் சுசித்ரா ‘என்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன் பாருங்க’ என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் தனுஷ் கார்த்திக் குமார் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சுசித்ரா கூறினார். மேலும் நடிகர்கள் ஒரு போதையில் இருந்தால் இந்த ரசிகர்கள் ஸ்டார் போதையில் இருக்கிறார்கள். நடிகர்கள் என்ன சொன்னாலும் அதை ரசிகர்கள் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

vishal

விஷாலுக்கு வந்தது வெறும் ஜுரம்தான். வேறு ஒன்னுமில்லை. அதான் அவரால் பேசமுடியவில்லை. கை நடுங்குகிறது. கீழே விழுகிறார். சின்னக் குழந்தைகளுக்கு ஜுரம் வந்தாலே போய் பரீட்சை எழுதி விட்டு வருகிறார்கள். இவர்கள் ஜுரம்னு சொல்வாங்களாம். அதை ஆடியன்ஸும் நம்புகிறார்கள். இதெல்லாம் அதோட பக்கவிளைவுதான் காரணம் என சுசித்ரா கூறினார்.

Next Story