புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? சூர்யா-ஜோதிகாவை நெகிழ வைத்த மகள்... குவியும் பாராட்டு..!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் மிக பிஸியாக நடித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
நடிகை ஜோதிகாவும் தொடர்ந்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இதற்காக ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் சென்று செட்டிலாகி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவ் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வபோது தியா குறித்து சில விஷயங்கள் இணையதள பக்கங்களில் வெளியாகி வரும். தற்போது இவர் தொடர்பாக வெளிவந்திருக்கும் செய்தியானது மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.
சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தியாவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்றால் எப்படி? அதிலும் சூர்யா-ஜோதிகா இருவரும் சினிமா பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில் தியாவின் சினிமா ஆசைக்கு நோ சொல்லி இருக்க மாட்டார்கள். அந்த வகையில் தியா தற்போது ஆவணப்படம் ஒன்றை இயக்கி இருக்கின்றார். இந்த ஆவணப்படம் திரைப்பட விழாவில் விருதும் வென்று இருக்கின்றது.
தியா தற்போது லீடிங் லைட் : தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆஃப் விமன் பிஹைண்ட் தி சீன்ஸ் என்கின்ற ஆவணபடத்தை எடுத்திருக்கின்றார். இந்த திரைப்படமானது திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றிருக்கின்றது. சிறந்த படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்று விருதினையும் தியா பெற்றிருக்கின்றார்.
இது தொடர்பாக நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் மகள் பதக்கம் வென்ற புகைப்படத்துடன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அதில் 'பொழுதுபோக்கு துறையில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து ஒரு மாணவியாக அர்த்தமுள்ள ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக தியா உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினையை வெளிக்கொண்டுவந்தற்காக நன்றி. இது போல் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்திருக்கின்றார்.
இந்த ஆவணப்படத்தின் யூடியூப் லிங்கையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிகை ஜோதிகா இந்த போஸ்டினை ஸ்டோரியாகவும் பகிர்ந்து இருக்கின்றார். தியா இயக்கியுள்ள ஆவணப்படம் மொத்தம் 13 நிமிடங்கள் 13 நொடிகள் இடம் பெற்று இருக்கின்றது. முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.