ஆயிரம் கோடி இல்ல.. அதுக்கும் மேல!.. கூலி படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த டார்கெட்!...

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து ரசிகர்களிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்தான் கூலி. இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதற்கு காரணம் ரஜினியுடம் லோகேஷ் இணைந்ததுதான்.
லோகேஷ் கேங்ஸ்டர் ஆக்சன் படத்தை அசத்தலாக எடுப்பார். ரஜினியோ பக்கா மாஸாக நடிப்பார். இவர்கள் ஒருவரும் ஒன்றாக இணைந்திருப்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு. அதோடு, தளபதி படத்தில் ரஜினியை மணிரத்னம் காட்டியது போல இந்த படத்தில் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகள் ரஜினியின் தளபதி லுக்கை நினைவுப்படுத்துகிறது.
இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா மற்றும் சத்யராஜ் மட்டுமல்ல. பாலிவுட் நடிகர் அமீர்கானும் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் 2 பாடல்களை இதுவரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்து வசூலை அள்ளிவிட வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கணக்கு போடுகிறது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. எனவே, அந்த படத்தின் வெற்றி ஃபார்முலாவை கூலி படத்திலும் அப்ளை செய்திருக்கிறார்கள். அதாவது பல மொழிகளிலில் இருந்தும் பல நடிகர்களை இறக்கியிருக்கிறார்கள். இந்த படம் 1000 கோடி வசூலை தாண்டும் என பலரும் சொல்லி வருகிறார்கள். ஏனெனில், படத்தின் ரிலீசுக்கு முன்பே 500 கோடி வரை இப்படம் வியாபாரம் ஆகியுள்ளது.
ஆனால், இப்படத்திற்கு 1200 கோடி முதல் 1500 கோடி வரை டார்கெட் வைத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். படத்திற்கு அதிக ஹைப் இருப்பதால் இந்த எல்லா மொழி ரசிகர்களும் படம் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். அதோடு, கூலி படம் உலகம் முழுவதும் 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. எனவே, இந்த வசூல் சாத்தியம் என சன் பிக்சர்ஸ் கருதுகிறது.