சுந்தர்.சி தல காலு புரியாம ஆடுறாரே… இந்த வருடம் இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?

by Akhilan |
sundar c
X

sundar c

SundarC: இந்த ஆண்டு தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர் சுந்தர்.சிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டமான ஆண்டாக மாறி இருக்கும் சுவாரசிய விஷயம் நடந்திருக்கிறது.

பொதுவாக ஒரு ஹீரோக்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பார்கள். ஆனால் ஒரு இயக்குனரால் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே இயக்க முடியும். ஏனெனில் படம் தொடங்குவதற்கு முன்னர் சில வேலைகளும் அது முடிந்த பின்னர் ரிலீஸ் வரை சில வேலைகளும் இருக்கும்.

இதனால் ஒரு இயக்குனர் வருடத்தில் ஒரு படம் முடிப்பதே பெரிய விஷயம்தான். ஆனால் இந்த வருடம் தற்போது சுந்தர்.சிக்கு வித்தியாசமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சுந்தர் சியின் முதல் திரைப்படமாக மதகஜ ராஜா ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்திருந்தனர். தற்போது திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸிருக்கு காத்திருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து மே மாதம் சுந்தர் சியின் கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வெற்றி படமாக அமைந்த கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான முதல் கட்ட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கவினை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்த நிலையில் அது தோல்வியில் முடிந்தது.

தற்போதைய படத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு விரைவில் ஷூட்டிங் செல்லவும் படக்குழு ஆயத்தமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது இன்னொரு இரண்டாம் பாக கதையான மூக்குத்தி அம்மன் படத்தையும் சுந்தர் சி தான் இயக்க இருக்கிறார். முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்த நிலையில் இரண்டாம் பாகம் சுந்தர்.சி கையில் வந்துள்ளது.

இப்படத்தில் மீண்டும் மூக்குத்தி அம்மன் ஆக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இன்னொரு சூப்பர் படத்தையும் கைவசம் வைத்திருக்கிறாராம்.

சுந்தர் சியின் வெற்றி படமான அரண்மனை படத்தின் ஐந்தாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளும் நடந்து வருகிறதாம். அது முடியும் பட்சத்தில் அடுத்த ஆண்டு அந்தப் படத்தையும் இயக்க சுந்தர் சி கிளம்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story