என் படம் ஹிட்டுதான்!.. ஆனா நான் இன்னும் ஹிட் ஆகல.. என்ன சுந்தர் சி இப்படி சொல்லிட்டாரு..

by Ramya |
sundar c
X

Director Sundar C: தமிழ் சினிமாவில் முறைமாமன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் இயக்குனர் சுந்தர் சி. தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியிருக்கின்றார்.

இவருடன் இயக்குனர்களாக பயணித்த பலரும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்ட நிலையில் தற்போது வரை முன்னணி இயக்குனராக இருந்து வருகின்றார் இயக்குனர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய திரைப்படம் அரண்மனை 4.


இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியாகின. கேம் சேஞ்சர், வணங்கான், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா மற்றும் மதகஜராஜா என்று 5 படங்கள் வெளியான நிலையில் இதில் மதகஜராஜா திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது.

12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. உண்மையை சொல்லப்போனால் இந்த ஆண்டு பொங்கல் வின்னர் மதகஜராஜா திரைப்படம் தான் .

இந்நிலையில் இன்று படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி, சுந்தர் சி ஆகியோர் கலந்து கொண்டு படம் குறித்து மகிழ்ச்சியாக பேசி இருந்தார்கள். ஆனால் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மட்டும் சற்று சோகமாக பேசியிருந்தார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'மதகஜராஜா 12 வருடங்களுக்கு பின்பு வெளியாகி வெற்றி பெற்றது. தனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கின்றது. கமர்சியலாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி. ஒரு கமர்சியல் திரைப்படம் என்றால் அது மிகப்பெரிய வெற்றி அடையும், ரசிகர்கள் ரசிப்பார்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பார்கள்.

ஆனால் எனக்கு மட்டும் எப்போதும் ஒரு ஃபீலிங் இருக்கும். என் திரைப்படம் வெற்றிபெற்ற அளவுக்கு எனக்கு பெரிய பெயர் கிடைக்காது. ஒரு நல்ல இயக்குனர் என்கின்ற பட்டியலில் எனது பெயர் எப்போதுமே இருக்காது. சினிமா என்பது மிகப்பெரிய தொழில் லட்சக்கணக்கான பேர் இதில் வேலை பார்த்து வருகிறார். ஒரு பொழுதுபோக்கு மற்றும் லாபகரமான ஒரு வேலை. அது போக கோடிக்கணக்கான மக்கள் நம் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக காசு கொடுத்து பணத்தை திரையரங்கங்களில் வந்து பார்க்கிறார்கள்.


மூன்று மணி நேரம் வந்து படத்தை பார்த்து அவர்களின் கவலைகளை எல்லாம் மறந்து விட்டு செல்கிறார்கள். அவர்களை சந்தோசப்படுத்துகிறேன் என்கின்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. 30 வருடமாக தொடர்ந்து மக்களின் ஆதரவாளும், கடவுளின் ஆசிர்வாதத்தாலும் தொடர்ந்து இயக்குனராக பயணித்து வருகின்றேன்.

இருப்பினும் கமர்சியலாக படம் வெற்றி பெற்றாலும் மனதுக்குள் ஒரு சின்ன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். எனக்கான பொசிஷன் தற்போது வரை கிடைக்கவில்லை. அதைப்பற்றி நான் பெரிய அளவு கவலைப்படுவதும் கிடையாது' என்று பேசி இருந்தார். இதனை தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி நீங்கள் அப்படி சொல்லக்கூடாது சார். கடந்த வருடம் உங்களின் அரண்மனை 4 திரைப்படம் தான் தமிழ் சினிமாவையே காப்பாற்றியது. அதேபோல இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மதகஜராஜா திரைப்படம் தான் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றது என்று ஆறுதலாக பேசினார்.

Next Story