அடேங்கப்பா!.. ஜோதிகாவுக்கே டப் கொடுக்கும் மகள்.. அடுத்த ஹீரோ ஹீரோயின் ரெடி!..
நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகின்றார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து கங்குவா திரைப்படத்தில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்தார். இப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இருப்பிடம் தொடர்ந்து படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் நடிகர் சூர்யா. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிகை திரிஷா நடித்து வருகின்றார்.
சூர்யாவின் குடும்பம்:
நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து முதன்முறையாக நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து காக்க காக்க, பேரழகன், ஜில்லுனு ஒரு காதல் என ஏராளமான திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருந்தார்கள்.
அப்போது இவர்களுக்குள் காதல் ஏற்பட பின்னர் விடு வீட்டார் சம்மதத்துடன் பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த தம்பதிகளுக்கு தியா என்கின்ற மகளும், தேவ் என்கின்ற மகனும் இருக்கின்றார்.
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா மீண்டும் நடிப்பதற்கு தொடங்கி இருக்கின்றார். தமிழில் பிஸியாக நடித்து வந்த ஜோதிகா தற்போது ஹிந்திக்கு சென்று அங்கும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
மும்பையில் செட்டில்:
தங்கள் குழந்தைகளின் மேல் படிப்புக்காக சூர்யாவும் ஜோதிகாவும் குடும்பத்துடன் மும்பைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். பல வருடங்கள் சென்னையில் இருந்து அவர்கள் தற்போது மும்பைக்கு செட்டிலாகி இருந்த நிலையில் சூர்யாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஜோதிகா எனக்காக பல தியாகங்களை செய்திருக்கின்றார்.
இவருக்காக மும்பை செல்லக்கூடாதா என்று தோன்றியது. அதனால் மும்பையில் செட்டிலாகி இருக்கிறோம் என்று கூறினார். மேலும் ஜோதிகா மும்பைக்கு சென்று செட்டிலான நிலையில் அங்கு படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இதற்கு நடிகர் சூர்யாவும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றார்.
வைரல் புகைப்படம்:
சூர்யாவின் மகள் மற்றும் மகன் இருவரும் பெரும்பாலும் வெளியில் தலை காட்டாதவர்கள். அவ்வபோது தனது குடும்பத்துடன் எடுத்தும் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் தனது பெற்றோர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருவார்கள். இந்நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார்கள்.
அங்கு தங்களது பிள்ளைகளையும் அழைத்து சென்று இருக்கிறார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் மகள் தியா ஜோதிகாவுக்கு டப் கொடுப்பார் போலயே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே போல் சூர்யாவின் மகன் தேவ் பெரிய பையனாக வளர்ந்து நிற்கின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.