மெய்யழகன் இயக்குநருக்கு கிடைத்த மெகா பரிசு!.. சூர்யாவின் தங்க மனசு!.. கார்த்தி பார்த்த தரமான வேலை!..

96 மற்றும் மெய்யழகன் படங்களை இயக்கி கத்தியின்றி ரத்தமின்றி நல்ல கதைகளை முன்னணி நடிகர்களை வைத்து கொடுத்து ஒட்டுமொத்த மக்களின் மனங்களிலும் இடம் பிடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் தான் பிரேம் குமார்.
சூர்யாவின் 2டி தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை.
ஆனால், ஏகப்பட்ட மக்களின் மனங்களை அந்த படம் ஓடிடியில் வெளியான பின்னர் கவர்ந்தது. தியேட்டருக்குச் சென்று இந்த படத்தை தவறவிட்டு விட்டோமே என பலரும் ஃபீல் செய்தனர். நடிகர் நானி ஹிட் 3 படத்தின் புரமோஷனின் போது சென்னைக்கு வந்தார். அப்போது அவரிடம் உங்களுக்குப் பிடித்த தமிழ் படம் எது என்கிற கேள்விக்கு மெய்யழகன் தான் என்றார்.

1000 கோடி பட்ஜெட்டில் கூட படமெடுத்து விடலாம். ஆனால், மெய்யழகன் போல மனதை வருடும் படங்களை எடுப்பது ரொம்பவே கடினம் என்றார். மெய்யழகன் படத்திற்கு பிறகு 96 பார்ட் 2 படத்தை தான் பிரேம் குமார் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அவருடைய நீண்ட கால கனவான மகிந்த்ரா தார் காரை வாங்க கடந்த ஒரு வருடமாக போராடிக் கொண்டிருந்தார். காசு அதிகமாக இருந்த நிலையில், வேறு ஒரு காரை வாங்க முடிவு செய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வசதிகள் மற்ற காரில் சரியாக அமையாத நிலையில், கார் வாங்க தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார்.
இதனை அறிந்துக் கொண்ட நடிகர் சூர்யா தற்போது அவருக்கு வெள்ளை நிற பிரம்மாண்ட தார் காரை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், நடிகர் கார்த்தி மெய்யழகன் இயக்குநருக்கு அந்த கார் சாவியை எடுத்துக் கொடுத்து அவரை அமர வைத்து அவருடன் ரைடு போன காட்சிகளையும் வெளியிட்டு சூர்யா சார் எனக்கு இன்னொரு அண்ணன் என பதிவிட்டுள்ளார். ரெட்ரோ படம் லாபம் அடைந்த நிலையில், மெய்யழகன் இயக்குநருக்கும் காரை பரிசாக வழங்கியுள்ளார் சூர்யா.