பாலாவுக்காக ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா!.. வணங்கான் விழாவில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?..

by Ramya |   ( Updated:2024-12-19 13:09:38  )
vananggan
X

vananggan

நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்கள் காரணமாக படுதோல்வியை சந்தித்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதனால் நடிகர் சூர்யா சற்று வருத்தத்தில் இருக்கின்றார்.

அடுத்தடுத்த படங்கள்:

கங்குவா திரைப்படம் தோல்வியாக அமைந்திருந்தாலும் நடிகர் சூர்யா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இதனை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பாலாவின் வணங்கான்:

இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்தார். பின்னர் திடீரென்று இப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதன் பிறகு நடிகர் அருண் விஜய் இப்படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார். வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா வெளியானதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது.

அதிலும் நடிகர் சூர்யாவிற்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் இப்படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார் என்று கூறி வந்தார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடைபெற்ற வணங்கான் பட நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டு இருந்தார்.

பாலா 25:

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி வணங்கான் படத்தின் ஆடியோ லான்ச் மட்டுமில்லாமல் நடிகர் பாலாவின் 25 வருட திரைப்பயணத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்பட்ட விழாவாகவும் கருதப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவக்குமார் கலந்துகொண்டு பாலா குறித்து மிக நெகழ்ச்சியாக பேசி இருந்தார்கள். இதன் மூலமாக பாலா மற்றும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


ஏமாந்த ரசிகர்கள்:

நடிகர் சூர்யா நேற்று வணங்கான் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது. நிச்சயம் இப்படத்தின் விழாவில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் பாலா மீது இருந்த அன்பு, மரியாதை காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகர் சூர்யாவுக்கு ஒரு பழக்கம் இருக்கின்றதாம். அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது ரசிகர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வாராம். அதற்காக ஒரு பொது இடத்தை தேர்வு செய்து அதில் தனது ரசிகர்களை எல்லாம் வரவழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் நேற்று அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வணங்கான் பல நிகழ்விற்கு வந்திருக்கின்றார். இதனால் சூர்யாவை காண்பதற்காக ஆவலுடன் வந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இருக்கிறார்கள்.

சிவக்குமார் செயல்: நடிகர் சூர்யாவின் தந்தையான சிவக்குமார் வணங்கான் நிகழ்ச்சியில் ஒரு சிறப்பான செயலை செய்திருக்கின்றார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து இயக்குனர்களும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போது மேடையில் பலரும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க சிவகுமார் அங்கு சென்று அனைவரையும் ஒழுங்குப்படுத்தி நிற்க வைத்து புகைப்படம் எடுப்பதற்கு உதவி செய்தாராம். இந்த செய்தியை சினிமா விமர்சனங்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Also Read : லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருந்தமான நடிகை அவர் மட்டும்தான்.. நயன் இல்லை! அடுத்த பஞ்சாயத்தா?

Next Story