நாய் மாறி வேலை செய்யணும்!.. அப்போதான் அப்படி வாழலாம்!.. சூர்யாவின் தத்துவத்தை பாருங்க!..

நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொன்ன வார்த்தையை தான் இன்னமும் பின்பற்றி வருவதாக பேசி இருப்பது ரசிகர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கோலிவுட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய சரிவை கொடுத்தது.
ஆனாலும் நடிகர் சூர்யா துண்டு விழாமல் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கண்ணாடிப் பூ பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த சிங்கிளை சீக்கிரமே வெளியிட போவதாகவும் ரசிகர்களுக்கு அந்த பாடலும் நிச்சயம் பிடிக்கும் என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் பாடல் வேலையில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கர் பிஸியாக இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நாயைப் போல உழைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ராஜா போல வாழ முடியும் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒருமுறை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை இன்னமும் தான் கடைப்பிடித்து வருவதாக சூர்யா கூறியுள்ளார்,