கங்குவா புரமோஷனுக்கு போய் அசிங்கப்பட்ட சூர்யா!. இதெல்லாம் தேவையா?!...
Kanguva: சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. சூரரைப்போற்று, ஜெய்பீம் என கவனம் ஈர்த்த சூர்யா அடுத்து எதற்கும் துணிந்தவன் என்கிற மொக்கை படத்தில் நடித்தார். அந்த படம் ஓடவில்லை. அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடிக்கப்போனார்.
இது ஒரு சரித்திர கதை கொண்ட படமாகும். இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். அதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரென்ச் ஆகிய மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்திருக்கிறார்கள்.
கங்குவா படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகம் வருகிற நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ரஜினி, விஜய்க்கு இருப்பது போல மற்ற மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ சூர்யா படத்திற்கு வியாபாரம் கிடையாது. ஆனால், கங்குவா படம் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருப்பதால் சில நூறு கோடிகளை வசூல் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
கங்குவா படம் உலகமெங்கும் 2 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்து வருகிறார். அதோடு, இப்படத்தின் இயக்குனர் சிவாவும் ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார். ஒருபக்கம் சூர்யாவும் ஷோலோவாக கங்குவா படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் கங்குவா படக்குழு புரமோஷன் செய்துள்ளது. சமீபகாலமாகவே திரைப்படத்தின் புரமோஷன் விழாக்கள் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் கங்குவா படக்குழு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இதில் சூர்யாவும் கலந்து கொண்டார். ஆனால், மாணவ, மாணவிகளுக்கு சூர்யா யாரென்றே தெரியவில்லையாம். அதனால் ‘என் பெயர் சூர்யா. நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். நான் 27 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். எனக்கு ஆதரவு கொடுங்கள்’ என தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் சூர்யா.
அதேநேரம், கங்குவா படத்தில் நடித்திருக்கும் திஷா பத்தானி, பாபி தியோல் ஆகியோர் அவர்களுக்கு நன்றாக பரிட்சயம் என்பதால் அவர்களை நம்பியே படக்குழு அங்கு சென்றிருக்கிறது.