
Cinema News
Jailer Vs Karuppu: சூர்யா மனதை மாற்றிய 2 பிளாப்கள்.. ஜெயிலர் 2-வோடு மோதும் கருப்பு..
ரிலீஸ் தேதி முக்கியம்:
Karuppu: ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அது எப்போது ரிலீஸ் ஆகிறது என்பதிலும் இருக்கிறது. அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி. ரிலீஸ் தேதி தவறாக அமைந்தால் அந்த படம் தோல்வியடைய கூட வாய்ப்பிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு மேஜிக்கில் நிகழும். அது ரிலீஸ் ஆகும் தேதி, அந்த படம் பற்றிய ரசிகர்களின் விமர்சனங்கள், ஊடகங்களின் பாராட்டுக்கள் என எல்லாம் சேர்ந்து ஒரு படம் ஹிட் அடிக்கும்.
அது எப்படி நிகழும்? எப்போது நிகழும்? என கணிக்கவே முடியாது. ரஜினி, கமல், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் அதிகளவு புரமோஷன் செய்யப்பட்டு வெளியாகி தோல்வி அடைந்திருக்கிறது. எந்த புரமோஷனும் இல்லாமல் வந்த டூரிஸ்ட் பேமிலி, லப்பர் பந்து போன்ற திரைப்படங்கள் ஹிட் அடித்திருக்கிறது.

சூர்யா சந்தித்த தோல்விகள்:
கோலிவுட்டில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியானதால் அவை லிஸ்ட்டில் இல்லை. அந்த படங்களுக்கு பின் அவர் சில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் மிகவும் ஆர்வமுடன் நடித்தார். இந்த படத்திற்கு பெரிய அளவு புரமோஷனும் செய்யப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
வேட்டையனால் கங்குவாவுக்கு வந்த சிக்கல்:
கங்குவா படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. எனவே ‘ரஜினியோடு சூர்யா மோதுகிறாரா?’ என பலரும் பேசினார்கள். இதை விரும்பாத சூர்யா ‘ரஜினி சார் நான் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்.. அவரோடு மோத நான் எப்போதும் ஆசைப்பட மாட்டேன்.. கங்குவா ரிலீஸ் தள்ளி வைக்கப்படும்’ என சொன்னார். ஆனால் அப்படி வெளியான கங்குவா ஓடவில்லை. வேட்டையன் படமும் பெரிய வெற்றி பெறவில்லை.

கருப்பு ரீலீஸ் தேதிக்கு வந்த சிக்கல்:
இப்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது பக்கா கமர்சியல் மசாலாவாக உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் கண்டிப்பாக சூர்யாவுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள், இதுவரை ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் இப்படத்தில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் இருந்தார்கள். இந்த வருட தீபாவளிக்கு திட்டமிட்டு, அடுத்த வருடம் பொங்கலுக்கு திட்டமிட்டு என எதுவுமே நடக்காமல் போனது.
ஜெயிலர் 2-வுடன் மோதும் கருப்பு:
இந்நிலையில்தான் கருப்பு திரைப்படம் 2026 ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. முதலில் ஏப்ரல் 14ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியாகிறது. எனவே ரிலீஸ் செய்தியை ஏப்ரல் 9ம் தேதிக்கு மாற்றிவிட்டனர். அதன்படி கருப்பு திரைப்படம் 2026 ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது.
கருப்புக்கும் ஜெயிலர் 2 ரிலீஸ் தேதிக்கு இடையே இருக்கிற வித்தியாசம் 5 நாட்கள் மட்டுமே. இந்த முறை ரஜினியுடன் மோதுவது பற்றி சூர்யா யோசிக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே இரண்டு படங்கள் சரியாக ஓடாத நிலையில் இனிமேலும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அவர் கருதி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் முடிவும் இதில் முக்கியமானது.
சூர்யாவின் லைன் அப்கள்:
- லக்கி பாஸ்கர் இயக்குனர் படத்தில் நடித்துவரும் புதிய படம்
- மலையாள பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்த படம்