Karuppu: விஜய்,சிவகார்த்திகேயனுக்கு எமனா வரும் சூர்யா!.. கருப்பு ரிலீஸ் தேதி இதுவா?!...
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷாவும், வில்லனாக ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளனர். படம் பக்கா கமர்ஷியல் மசாலா படமாக உருவாகியிருப்பதால் சூர்யாவுக்கு கருப்பு ஒரு ஹிட் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியான போதே இப்படத்தின் வெற்றி உறுதியானது.
அதேநேரம் கருப்பு படம் பல சிக்கல்களை சந்தித்தது. ஆர்.ஜே.பாலாஜிக்கு தயாரிப்பாளருடன் மனக்கசப்பு, திரிஷாவுடன் மோதல் என பல சம்பவங்கள். ஒருபக்கம் படத்தின் ஓடிடி உரிமை கூட விற்காமல் இருக்க படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. முதலில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால், ஓடிடி உரிமை விற்பனை ஆகததாலும், சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததாலும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி கருப்பு படம் வெளியாகும் என சொல்லப்பட்டது.
சூர்யாவோ வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போய்விட்டார். அந்த படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்துவிட்டது. இந்நிலையில் கருப்பு படத்தை 2026 ஜனவரி 23ம் தேதி வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம். ஏனெனில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தோடு ஓடிடி டீல் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஜனவரி 9ம் தேதி விஜயின் ஜனநாயகன் வருகிறது. 14ம் தேதி சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகிறது. எப்படியும் 3 வாரங்களுக்கு இப்படத்தின் வசூல் இருக்கும். அப்படி இருக்க கருப்பு படத்தை இறக்கினால் அந்த 2 படங்களின் வசூல் பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் முடிவும் இதில் முக்கியமானது.
எனவே, என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!...
