அடுத்த ரோலக்ஸ் லோடிங்கா? முக்கிய நடிகர் படத்தில் மீண்டும் கேமியோ ரோல் பண்ணும் சூர்யா..

Surya: நடிகர் சூர்யா நடிப்பில் படங்கள் பரபரப்பாக தயாராகி வரும் நிலையில் கூட தன்னுடைய சக நடிகருக்கு மீண்டும் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று என படங்கள் ஹிட்டடித்து வந்த சமயத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சூர்யா. அப்படம் பெரிய அளவு ஹிட் கொடுக்காமல் போக பாலிவுட் பக்கம் தன்னுடைய ஆசையை திருப்பினார்.
மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டிலாகினார். படத்தில் நடிக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. கர்ணன் என்ற பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் தான் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியானது.
மிகப்பெரிய பொருட் செலவில் பல மொழிகளில் வெளியான இப்படம் பெரிய அளவு ஹிட் கொடுக்கவில்லை. எல்லா மொழிகளிலுமே மண்ணை கவ்வ இவரை வைத்து பல கோடி புராஜெக்ட்டை இப்போ செய்தால் அது சரியாக இருக்காது என நழுவி கொண்டனராம்.
இதனால் சூர்யா கோலிவுட்டில் ஏற்கனவே இருந்த இடத்தையும் விட்டு விட்டார். அதனால் இனி விடக்கூடாது என தன்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து ஆட இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் பிரபல மலையாள இயக்குனர் பேசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தினை மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் பிரபல இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் மோகன் லால் மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறாராம்.
இப்படத்தில் நடிக்க 10 நாட்கள் காஷீட் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதன் ஷூட்டிங் மார்ச்சில் நடைபெற இருக்கிறதாம். இதற்கு முன்னரே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்து ஹிட் அடித்த சூர்யாவுக்கு இந்த ரோலும் பெயர் வாங்கி தரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.