பெத்த தொகைக்கு விற்பனையான ரெட்ரோ!.. தமிழ்ல மட்டுமில்ல ஹிந்தியிலயும் கலெக்ஷன் அள்ளுதே!..

Actor Suriya: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2 வருடங்களாக சூர்யா இந்த திரைப்படத்திற்காக மெனக்கெட்டு நடித்து வந்தார். படம் கடந்த வருடம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
ரெட்ரோ திரைப்படம்: கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட்டானார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து இருக்கின்றார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. படத்திலிருந்து வெளியான டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. படம் 80ஸ் காலகட்டத்தில் எடுக்கப்பட்டது போன்று இருக்கின்றது.
இந்த திரைப்படம் ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இப்படத்தின் மீது சூர்யாவும் சூர்யாவின் ரசிகர்களும் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். காரணம் கங்குவா திரைப்படம் கொடுத்த தோல்விதான். அதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பெரிய அளவுக்கு ஹிட்டு கொடுக்கவில்லை. இதனால் நிச்சயம் ரெட்ரோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
ரெட்ரோ ஓடிடி விற்பனை: சமீப காலமாக ஓடிடி நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்குவது கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு அது நல்ல லாபத்தை கொடுப்பதில்லை என்பதால் தொடர்ந்து ஓடிடி நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.
கங்குவா படத்தின் தோல்வி காரணமாக நிச்சயம் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி பெரிய அளவுக்கு வியாபாரம் ஆகாது என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் கூறிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு netflix நிறுவனம் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 80 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது இதன் ஆடியோ ரைட்ஸ் உரிமையை டி சீரியஸ் நிறுவனம் வாங்கியிருக்கின்றது. படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ரெட்ரோ திரைப்படத்தின் ஹிந்தி டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையும் விற்பனையாகி இருக்கின்றது.
அதாவது ஹிந்தியில் இந்த திரைப்படத்தை 25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். இந்த தகவல் சூர்யா ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.