தனுஷ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா!.. அதுவும் இப்படிப்பட்ட ஒரு கதையா?..
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் கவனமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார் நடிகர் சூர்யா. அதற்கு காரணம் கங்குவா திரைப்படத்தில் தாக்கம். சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை கடந்த 2 வருடங்களாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வந்தார். இப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்த நிலையில் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
இருப்பினும் தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஏற்கனவே கங்குவா திரைப்படத்திற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் சொதப்பிய நிலையில் கங்குவா திரைப்படம் தான் சூர்யாவுக்கு கெரியர் பெஸ்டாக இருக்கப் போகின்றது என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். ஆனால் படம் சொதப்பியது நடிகர் சூர்யாவுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா கமிட் செய்த திரைப்படம் சூர்யா 44 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரெட்ரோ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா சூர்யாவுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
சூர்யாவின் அடுத்த 2 திரைப்படங்களும் நிச்சயமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபல இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் நடிகர் தனுஷை வைத்து வாத்தி என்ற திரைப்படத்தை இயக்கிய மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சக்க போடு போட்டது. அதனை தொடர்ந்து கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கின்றாராம். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
மாருதி கார்களின் முதல் எஞ்சின் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை பற்றிய கதை இது என்றும், இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ள நிலையில் சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு 796 சிசி என்று பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.